அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: இலவச சிலிண்டர் பெறுவதற்கான தகுதிகள் என்ன..?

தமிழகத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
free cylinders, CM Vijay
free cylinders, CM Vijay
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழகத்தில் வரும் பொங்கலுக்கு, அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் (Annapoorani Super Six) திட்டத்தின் கீழ் 3 சிலிண்டர்களுக்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்க உள்ளது. இதற்காக, சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளவர்களின் விபரங்களை, எண்ணெய் நிறுவனங்களிடம் சேகரிக்கும் பணியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர் வழங்கப்படும்' என, தவெக, தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி முதல் கட்டமாக, 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தில், ஆண்டுக்கு, மூன்று இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம், வரும் 2027 ஜனவரி பொங்கல் திருநாள் முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கான முழுத் தொகையும் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் (Direct Benefit Transfer) என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தால், 1.30 கோடி குடும்பங்கள் பயன் பெறும். ஆண்டுக்கு, ரூ.2.50 லட்சத்துக்கு உட்பட்டு வருவாய் பெறும் குடும்பத்தினர், சிறு, குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் இதில் பயன் பெற உள்ளனர். வரும் பொங்கல் முதல் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கு, ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.

பயனாளிகள் முதலில் எரிவாயு நிறுவனங்களிடம் (LPG Companies) வழக்கம் போல சிலிண்டரை முன்பதிவு செய்து, முழுத் தொகை கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டதும், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் பட்டியலின் அடிப்படையில், அதற்கான தொகை பயனாளியின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக அரசு சார்பில் செலுத்தப்படும்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை, தமிழக அரசு தொடங்கி உள்ளது.

இலவச சிலிண்டர்
இலவச சிலிண்டர்

ஆதார் எண் அடிப்படையில் தமிழ்நாட்டில் மொத்தம் 2.08 கோடி ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக, ஏற்கனவே சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளவர்களின் ஆரம்பக்கட்ட விபரங்கள் அரசிடம் உள்ளன. இத்திட்டத்தைச் சீராகச் செயல்படுத்த, தகுதியான குடும்பங்களின் துல்லியமான புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம், சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, தமிழகத்தில் எத்தனை குடும்பத்தினர், இரண்டு சிலிண்டர், ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர்;

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு.!
free cylinders, CM Vijay

பிரதமரின் 'உஜ்வாலா' திட்டத்தில் இலவச காஸ் இணைப்பு பெற்றுள்ள பயனாளிகள் எண்ணிக்கை உள்ளிட்ட துல்லியமான விபரங்கள் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட பிறகு, ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் திட்டத்திற்கான தகுதிவாய்ந்த பயனாளிகளின் இறுதிப் பட்டியல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

இத்திட்டம் மூலம் தமிழகத்தில் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெற உள்ளனர். இதற்கான தகுதி வரம்புகள்:

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிந்த பிரிவினர், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த மாபெரும் திட்டத்திற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இதற்கான தகுதியுள்ள பயனாளிகளின் விவரங்களைச் சேகரிக்கும் பணிகளைத் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும் இலவச சிலிண்டர் திட்டத்திற்கும் ரேஷன் கார்டுதாரர்களிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டு, இந்த விபரங்கள் அனைத்தும், 'இ கவர்னன்ஸ்' எனப்படும் மின் ஆளுமை முகமை வாயிலாக சரிபார்க்கப்படும். அதன் அடிப்படையில், அரசு விதிக்கும் தகுதி மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே இலவச சிலிண்டர் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

இதையும் படியுங்கள்:
மகளிருக்கு ஜாக்பாட்! இலவச சிலிண்டர் யாருக்கு? எந்தெந்த பஸ்களில் இலவச பயணம்?- முழு விவரம்..!
free cylinders, CM Vijay

பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி என, ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் வழங்கவும், அந்த தொகையை, பண்டிகைக்கு முந்தைய நாட்களில், பயனாளியின் வங்கி கணக்கில் (DBT) செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com