வாரத்தின் முதல் நாளே சரிந்த தங்கம் விலை.! எவ்வளவு தெரியுமா.?

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
Gold Price Updates
Gold Price AI Image
Updated on

ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை குறையும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் முழுக்க தங்கத்தின் விலை ஏற்றத்தையே சந்தித்தது. இதனால் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.5,960 உயர்ந்தது. இந்த திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதன் தாக்கத்தால் தான் இந்திய சந்தையிலும் விலை உயர்ந்தது. நேற்று (ஆகஸ்ட் 9) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.13,965-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 10) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

தொழில்துறை நிறுவனங்கள் வெள்ளி வாங்குவதைக் குறைத்துள்ளன. இதனால் கடந்த சில மாதங்களாகவே வெள்ளியின் விலை குறைந்து வருகிறது. இந்த விலை குறைவு இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் எனத் தெரியவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு இறுதியில் வெள்ளி விலை உயரும் எனக் கூறப்படுகிறது.

தங்கத்தைப் பொறுத்தவரை கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் உயரும் எனத் தெரிகிறது. ஆடி மாதம் முடிந்த பிறகு திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் என்பதால், தங்கம் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் விலை உயரவும் வாய்ப்புண்டு.

இதையும் படியுங்கள்:
2026-ல் அதிக லாபத்தை தரப்போகும் முதலீடு இதுதான்.! பிரபல முதலீட்டாளர் பளீச்..!
Gold Price Updates
gold price
gold

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஆகஸ்ட் 9: 1 கிராம் - ரூ.13,965 1 சவரன் ரூ.1,11,720

ஆகஸ்ட் 8: 1 கிராம் - ரூ.13,965 1 சவரன் ரூ.1,11,720

ஆகஸ்ட் 7: 1 கிராம் - ரூ.13,900 1 சவரன் ரூ.1,11,200

ஆகஸ்ட் 6: 1 கிராம் - ரூ.13,750 1 சவரன் ரூ.1,10,000

ஆகஸ்ட் 5: 1 கிராம் - ரூ.13,480 1 சவரன் ரூ.1,07,840

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஆகஸ்ட் 9: 1 கிராம் - ரூ.250

ஆகஸ்ட் 8: 1 கிராம் - ரூ.250

ஆகஸ்ட் 7: 1 கிராம் - ரூ.250

ஆகஸ்ட் 6: 1 கிராம் - ரூ.250

ஆகஸ்ட் 5: 1 கிராம் - ரூ.240

நீண்ட கால தங்க முதலீடு மற்றும் நிதித் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சிறு மற்றும் பெரு முதலீட்டாளர்கள் தங்கத்தின் தினசரி விலையைக் கண்காணித்து வருகின்றனர்.

நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்க காலங்களில், பாதுகாப்பான முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாக தங்கம் கருதப்படுகிறது. இதன் காரணமாகத் தான் விலை உயர்ந்தாலும் தங்கத்தின் மீதான முதலீடுகள் மட்டும் குறைவதில்லை.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
Gold Price Updates
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com