ஷாக்.! ஒரே நாளில் ரூ.2400 உயர்ந்த தங்கம்.. ரூ.10,000 உயர்ந்த வெள்ளி..!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price Today
Updated on

அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை நிறுத்துவதில் அதிபர் டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஹார்மூஸ் ஜலசந்தியைத் திறக்க, ஈரானின் அணு ஆயத தயாரிப்பை எதிர்க்கப் போவதில்லை என அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனால் விரைவில் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர் முடிவுக்கு வரும் பட்சத்தில், அது தங்கத்தின் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.5,960 வரை உயர்ந்தது. இந்த வாரத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை சரிந்ததால், அடுத்தடுத்த நாட்களில் விலை சரியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று (ஆகஸ்ட் 10) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. ஆனால் வெள்ளியின் விலை மாற்றமின்றி விற்பனையானது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 11) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,14,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.300 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து, ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வருங்காலத்தில் மேலும் விலை உயரும் என்ற கணிப்பே இதற்கு காரணம்.

வருகின்ற 2035-ல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.9 லட்சமாக இருக்கும் என பிரபல பொருளாதார வல்லுநர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார். இவருடைய கணிப்பு பொய்யாகுமா அல்லது மெய்யாகுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தங்கம் விலை
Gold price
இதையும் படியுங்கள்:
#BIG NEWS : பெட்ரோல் பங்குகளில் ஆன்லைன் பேமெண்ட்டுக்கு திடீர் தடை..!
தங்கம் விலை

கடந்த மாதம் 2026 ஜூலை 11-ல் தங்கத்தின் விலை:

1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400

கடந்த மாதம் 2026 ஜூலை 11-ல் வெள்ளியின் விலை:

1 கிராம் - ரூ.240

கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 11-ல் தங்கத்தின் விலை:

1 கிராம் - ரூ.9,375 1 சவரன் ரூ.75,000

கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 11-ல் வெள்ளியின் விலை:

1 கிராம் - ரூ.127

கடந்த ஆண்டு இதே தேதியில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கியிருந்தால், உங்களுக்கு இப்போது நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கும். அந்த அளவிற்கு கடந்த ஓராண்டில் விலை உயர்ந்துள்ளது.

கடந்த மாத விலையுடன் ஒப்பிடும் போது இன்றைய விலையானது சிறிதளவே உயர்ந்துள்ளது. இம்மாத இறுதியில் தங்கம் விலை குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும் தங்கத்தின் ஏற்ற இறக்கம் உலகப் பொருளாதார சந்தையைப் பொறுத்தே அமையும்.

முதலீடோ அல்லது தங்க நகை வாங்க விருப்பமோ, பணம் இருக்கும் போதே வாங்கி விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com