ஆடி வெள்ளியில் அள்ளுங்க.! ரூ.5,000 சரிந்த தங்கம், வெள்ளி விலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
Updated on

சர்வதேச பொருளாதார நிலவரங்களின் அடிப்படையில் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் நிகழும். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 14) சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 88.36 டாலர் குறைந்து 43,18.25 டாலராக விற்பனையாகிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 1.65 டாலர் சரிந்து, 63.87 டாலராக உள்ளது. இதன் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, மாத இறுதிக்குள் குறையுமா என இல்லத்தரசிகள் எதிர்பார்க்கின்றனர். சாமானிய மக்கள் தங்கத்தை அடிக்கடி வாங்காவிட்டாலும், தங்கத்தின் விலை குறையும் போது கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள்.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (ஆகஸ்ட் 13) தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.14,220-க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ.1,13,760-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 14) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,440 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, இந்த ஆண்டு இறுதியில் ரூ.1.5 லட்சமாக உயரும் எனக் கணிக்கப்பட்டது. இதற்கு எதிர்மாறாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே உள்ளது. இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் மீண்டும் பழைய விலைக்கே வருமா என்ற எதிர்பார்ப்பு மட்டும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வெள்ளியில் முதலீடு செய்தால் பலன் கிடைக்குமா?
தங்கம் விலை
gold price
gold rate

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஆகஸ்ட் 13: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760

ஆகஸ்ட் 12: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600

ஆகஸ்ட் 11: 1 கிராம் - ரூ.14,150 1 சவரன் ரூ.1,13,200

ஆகஸ்ட் 10: 1 கிராம் - ரூ.13,950 1 சவரன் ரூ.1,11,600

ஆகஸ்ட் 9: 1 கிராம் - ரூ.13,965 1 சவரன் ரூ.1,11,720

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஆகஸ்ட் 13: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 12: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 11: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 10: 1 கிராம் - ரூ.250

ஆகஸ்ட் 9: 1 கிராம் - ரூ.250

கடந்த 5 நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களைப் பார்க்கும் போது, தங்கத்தின் விலை ரூ.3,000-க்கும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 2 முறை தான் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

தங்கத்தின் விலை வருங்காலத்தில் உயரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு முந்தைய விலை நிலவரங்களே சாட்சி. ஆகையால் தற்போதைய சூழலில் தங்க முதலீட்டை முன்னெடுப்பது தான், நமக்கு இருக்கும் ஒரே வழி.

இதையும் படியுங்கள்:
SIP திட்டத்தில் முதலீடு செய்ய இனி 10 ரூபாய் போதும்..! அமலுக்கு வந்தது புதிய திட்டம்..!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com