

சர்வதேச அளவிலான பொருளாதார தாக்கங்கள், தங்கம் மற்றும் வெள்ளி விலையின் மீது நேரடியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா - ஈரான் போர் ஒருபுறமிருக்க, ரஷ்யா - உக்ரைன் போரும் தற்போது தீவிரமடைந்துள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 16) ரஷ்யா மீது பயங்கர தாக்குதலை நடததியது உக்ரைன். உலகளவில் இந்தத் தாக்குதல் பேசுபொருளான நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு இப்போது விலை மாற்றத்தைக் கொடுக்கவில்லை என்றாலும், அடுத்த 2 வருடங்களுக்குள் தங்கத்தின் விலையேற்றம் உறுதி என்பதே வல்லுநர்களின் வாதமாக உள்ளது.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (ஆகஸ்ட் 16) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி தங்கம் ஒரு கிராம் ரூ.14,220-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 17) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,14,160-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தாலும், ரூ.1 லட்சத்திற்கு கீழே குறையவில்லை. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகம் என்ற சூழல், சாமானியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம், காது குத்துதல் மற்றும் பிறந்தநாள் விழா போன்ற உறவினர்களின் விழாக்களுக்கு கூட தங்க நகையை எடுக்க முடியாமல் சாமானிய மக்கள் திணறுகின்றனர். இன்னும் சில காலம் போனால், சாமானியருக்கு தங்கம் என்றுமே எட்டாக்கனி தான் என்ற நிலை உருவாகி விடும்.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760
ஆகஸ்ட் 15: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760
ஆகஸ்ட் 14: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600
ஆகஸ்ட் 13: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760
ஆகஸ்ட் 12: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 15: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 14: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 13: 1 கிராம் - ரூ.260
ஆகஸ்ட் 12: 1 கிராம் - ரூ.260
கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளியின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை வருங்காலத்தில் உயரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு முந்தைய விலை நிலவரங்களே இதற்கு சாட்சி. ஆகையால் தற்போதைய சூழலில் தங்க முதலீட்டை முன்னெடுப்பது தான், சாமானிய மக்ளுக்கு இருக்கும் ஒரே வழி
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.