அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் மாற்றமில்லாமல் தொடரும் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரத்தின் முதல் 2 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்தது. ஆனால் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) காலை தங்கத்தின் விலை ரூ.680 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. யாரும் எதிர்பார்க்கத வகையில் அன்று மாலையே தங்கம் விலை ரூ.1,560 உயர்ந்தது.
இந்த விலை உயர்வு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்றும் (ஆகஸ்ட் 20) தங்கத்தின் விலை ரூ.1,600 உயர்ந்தது. இந்தத் தொடர் விலையேற்றத்தால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (ஆகஸ்ட் 20) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்:
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 21) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்து, ரூ.1,17,680-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.14,710-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.265-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.
மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தங்கத்தின் விலை பெரிய அளவில் மாற்றத்தை சந்திக்கவில்லை என்றாலும், விலை உயராமல் இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது.
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை தங்கத்தின் விலை ரூ.10,000-க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு மேலும் நீடித்தால், விரைவில் தங்கம் விலை ரூ.1.5 லட்சத்தை எட்டி விடும்.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.14,600 1 சவரன் ரூ.1,16,800
ஆகஸ்ட் 19: 1 கிராம் - ரூ.14,400 1 சவரன் ரூ.1,15,200
ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.14,290 1 சவரன் ரூ.1,14,320
ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.14,270 1 சவரன் ரூ.1,14,160
ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.260
ஆகஸ்ட் 19: 1 கிராம் - ரூ.250
ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.255
தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் இந்த வாரத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. விலை உயர்கிறதே என்று கவலைப்படாமல், தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டில் கவனம் செலுத்தினால், வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். கடந்த கால விலை நிலவரங்களே இதற்கு சாட்சி.
கடந்த வருடம் இதே நாளில் 1 சவரன் தங்கத்தின் விலை ரூ.73,840 தான். ஆனால் இன்றைய தங்கத்தின் விலை, அதை விட 50%-கும் மேல் உயர்ந்துள்ளது. அடுத்த வருடம் இதே நாளில் தங்கம் விலை ரூ.2 லட்சத்தைக் கூட நெருங்கக் கூடும். ஆகையால் தான் இன்றைய காலத்தில் தங்க முதலீடு நல்ல லாபத்தைக் கொடுக்கும் முதலீடாக இருக்கிறது
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.