​"அப்பாடா.. ஒரு வழியா குறைஞ்சிருச்சு!" ஒரே நாளில் ரூ.10,000 சரிந்த தங்கம், வெள்ளி விலை.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
Updated on

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் மட்டும் ரூ.5,840 உயர்ந்த நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளே ரூ.640 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. தங்கத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

உலகளாவிய போர் நடவடிக்கைகள் மற்றும் சந்தை நிலவரங்களைப் பார்த்தால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியிலும், நடப்பாண்டின் தொடக்கத்திலும் தங்கத்தின் விலை அபரிமிதமாக உயர்ந்தது. அதற்குப் பின் ஓரளவு சரிந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்த விலையேற்றம் தொடரும் பட்சத்தில் தங்கம் விலை இந்த ஆண்டிலேயே ரூ.2 லட்சத்தைக் கூட எட்டி விடும். உங்களுக்கு தங்கம் வாங்கும் எண்ணம் இருந்தால், இப்போதே வாங்கி விடுவது தான் நல்லது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (ஆகஸ்ட் 24) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.275-க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 25) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து, ரூ.1,20,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.15,010-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.265-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுதவிர அமெரிக்கா - கனடா இடையேயான வர்த்தகத்தில் இரு நாடுகளும் வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் டாலரின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து, விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
"ஒரு சொட்டு எண்ணெய் கூட.." உலகிற்கு வரப்போகும் பேராபத்து.! ஈரான் பகிரங்க எச்சரிக்கை.!
தங்கம் விலை

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.15,030 1 சவரன் ரூ.1,20,240

ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600

ஆகஸ்ட் 22: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600

ஆகஸ்ட் 21: 1 கிராம் - ரூ.14,850 1 சவரன் ரூ.1,18,800

ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.14,600 1 சவரன் ரூ.1,16,800

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.275

ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.270

ஆகஸ்ட் 22: 1 கிராம் - ரூ.270

ஆகஸ்ட் 21: 1 கிராம் - ரூ.270

ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் மாதத்திலும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்த்த இல்லத்தரசிகளுக்கு, பெருத்த ஏமாற்றமே மிச்சம். ஆனால் இந்த விலை உயர்வு பெரு முதலீட்டாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் தங்கத்தை ஆபரண நகையாக வாங்குபவர்கள் தான் அதிகம். தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் தங்கத்தில் முதலீடு செய்வது, இன்றைய காலத்தில் சிறந்த முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Gold Rate
Gold Price AI Image
இதையும் படியுங்கள்:
10,000 ஏரிகள் காலி: வறட்சி மாநிலமாகிறதா தமிழ்நாடு? அவசர கோரிக்கை விடுத்த அன்புமணி.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com