செம சான்ஸ்: ஒரே நாளில் ரூ.2,360 சரிந்த தங்கம் விலை.! இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் ஆஃபர்.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
Updated on

தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கத்தில் சற்று சரிந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 28) மாலை திடீரென உயர்ந்தது. நேற்று முன்தினம் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் நேற்று மட்டும் காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்தது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தங்கத்தின் தொடர் விலை உயர்வுக்கு கடந்த 2 நாட்களாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் நேற்றைய விலை உயர்வின் மூலம் மீண்டும் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வராத சூழலில், தங்கத்தின் விலை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இன்னும் சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று காலையில் ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்த நிலையில், மாலையில் ரூ.1,200 உயர்ந்தது. ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.600 வரை அதிகரித்து.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (ஆகஸ்ட் 28) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.14,800-க்கும், ஒரு சவரன் ரூ.75 உயர்ந்து ரூ.1,18,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.265-க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 29) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,360 குறைந்து, ரூ.1,16,040-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.

உலகளாவிய போர் நடவடிக்கைகள் மற்றும் சந்தை நிலவரங்கள் தங்கத்தின் விலையை தினசரி மாற்றி அமைக்கின்றன.

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழே வருமா என்ற சாமானியர்களின் எதிர்பார்ப்பு நடக்குமா அல்லது ரூ.2 லட்சத்தை நோக்கி நகருமா என்பதை இந்த ஆண்டு இறுதியில் புரிந்து கொள்ளலாம். எப்படி இருப்பினும் விலை உயரவே வாய்ப்பு அதிகம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
​ETF-களை நம்பி முதலீடு செய்யலாமா.? ராபர்ட் கியோசாகியின் திடீர் எச்சரிக்கை.!
தங்கம் விலை

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஆகஸ்ட் 28: 1 கிராம் - ரூ.14,800 1 சவரன் ரூ.1,18,400

ஆகஸ்ட் 27: 1 கிராம் - ரூ.14,725 1 சவரன் ரூ.1,17,800

ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080

ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080

ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.15,030 1 சவரன் ரூ.1,20,240

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஆகஸ்ட் 28: 1 கிராம் - ரூ.265

ஆகஸ்ட் 27: 1 கிராம் - ரூ.265

ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.265

ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.265

ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.275

கடந்த 2 நாட்களாக குறைந்த தங்கத்தின் விலை, நேற்று மாலை திடீரென அதிகரித்தது. மாத இறுதியில் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று விலை உயர்ந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை உயர்வால் தான் டாலர் முதலீட்டை தவிர்த்து விட்டு, பெரு முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளனர். கடந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு, இந்த ஆண்டு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. சாமானியர்களும் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டில் இப்போதே கவனம் செலுத்தினால், அடுத்த ஆண்டில் நல்ல லாபம் கிடைக்கும்.

Gold
Gold
இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com