சம்பளம் வாங்குவோர் குஷி.!! ரூ.1,080 சரிந்த தங்கம் விலை.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold price
Updated on

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.35,60 வரை குறைந்தது. அதற்கு முந்தைய வாரம் விலை அதிகரித்த நிலையில் கடந்த வாரத்தில் குறைந்தது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தங்கத்தின் தொடர் விலை உயர்வுக்கு கடந்த வாரம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் எப்படி இருக்கப் போகிறது என பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலை நிலவரங்களை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வராத சூழலில், தங்கத்தின் விலை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (ஆகஸ்ட் 30) ஞாயிற்றுக்கிமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.260-க்கு விற்பனையானது.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை

இன்றைய நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 31) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைந்து, ரூ.1,14,960-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.

உலகளாவிய போர் நடவடிக்கைகள் மற்றும் சந்தை நிலவரங்கள் தங்கத்தின் விலையை தினசரி மாற்றி அமைக்கின்றன. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழே வருமா என்ற சாமானியர்களின் எதிர்பார்ப்பு நடக்குமா அல்லது ரூ.2 லட்சத்தை நோக்கி நகருமா என்பதை இந்த ஆண்டு இறுதியில் புரிந்து கொள்ளலாம். எப்படி இருப்பினும் விலை உயரவே வாய்ப்பு அதிகம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலை
Gold PriceAI Image
இதையும் படியுங்கள்:
வரி விதிப்புக்கேற்ப எந்த தங்க முதலீடு சிறந்தது?
தங்கம் விலை

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஆகஸ்ட் 30: 1 கிராம் - ரூ.14,505 1 சவரன் ரூ.1,16,040

ஆகஸ்ட் 29: 1 கிராம் - ரூ.14,505 1 சவரன் ரூ.1,16,040

ஆகஸ்ட் 28: 1 கிராம் - ரூ.14,800 1 சவரன் ரூ.1,18,400

ஆகஸ்ட் 27: 1 கிராம் - ரூ.14,725 1 சவரன் ரூ.1,17,800

ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஆகஸ்ட் 30: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 29: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 28: 1 கிராம் - ரூ.265

ஆகஸ்ட் 27: 1 கிராம் - ரூ.265

ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.265

ஜூன், ஜூலை மாதங்களுடன் ஒப்பிட்டுப் பாரத்தால் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.10,000-க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் தான் டாலர் முதலீட்டை தவிர்த்து விட்டு, பெரு முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு, இந்த ஆண்டு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. சாமானியர்களும் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டில் இப்போதே கவனம் செலுத்தினால், அடுத்த ஆண்டில் நல்ல லாபம் கிடைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com