ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு.! பட்ஜெட் நாளில் தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
Gold price
Gold price
Updated on

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இன்று (ஆகஸ்ட் 5) பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய வாய்ப்பு இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் சமாதானப் பாதைக்குத் திரும்பி இருப்பதால், மீண்டும் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த மாற்றம் ஏற்றமா அல்லது இறக்கமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை சிறிய அளவில் குறைந்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.235-க்கே விற்பனையாகி வருகிறது.

நேற்று (ஆகஸ்ட் 4) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 சரிந்து ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 5) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,06,880-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த 3 மாதங்களாக தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமில்லாத சூழலில், முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர். திடீரென விலை உயர்ந்து விட்டால், இப்போது முதலீடு செய்பவர்களுக்கு ஜாக்பாட்டாக இருக்கும்.

ஒருவேளை நகை வாங்கத் திட்டமிட்டிருந்தாலும், இப்போதே வாங்கி விடுவது நல்லது. ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
பணத்தைப் பரவலாக முதலீடு செய்வதன் அவசியம் என்ன தெரியுமா?
Gold price
தங்க நகைகள் - Gold Karat Guide
தங்க நகைகள் - Gold Karat GuideAI Image

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஆகஸ்ட் 4: 1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600

ஆகஸ்ட் 3: 1 கிராம் - ரூ.13,250 1 சவரன் ரூ.1,06,000

ஆகஸ்ட் 2: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760

ஆகஸ்ட் 1: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760

ஜூலை 31: 1 கிராம் - ரூ.13,255 1 சவரன் ரூ.1,06,040

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஆகஸ்ட் 4: 1 கிராம் - ரூ.235

ஆகஸ்ட் 3: 1 கிராம் - ரூ.235

ஆகஸ்ட் 2: 1 கிராம் - ரூ.235

ஆகஸ்ட் 1: 1 கிராம் - ரூ.235

ஜூலை 31: 1 கிராம் - ரூ.235

மீண்டும் 5 இலக்க எண்களுக்குள் தங்கத்தின் விலை வருமா என இல்லத்தரசிகள் எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை ரூ.1 லட்சத்திற்குள் வந்து விட்டால், அது மிகபபெரிய நற்செய்தியாக இருக்கும். ஆனால் இதற்கான வாய்ப்பு 50:50 சான்ஸ் என்பது போலவே இருக்கிறது. ஒருவேளை குறைந்தாலும், மீண்டும் ஏறி விடும் என்பதே நிதர்சனம். அதனால் தான் தங்க முதலீடு பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
வரி விதிப்புக்கேற்ப எந்த தங்க முதலீடு சிறந்தது?
Gold price
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com