ணஉலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு உயரும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சரிந்து வருகிறது. இந்த சரிவின் எதிரொலி இந்தியாவிலும் எதிரொலித்தது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை நேற்று இருமுறை தடாலடியாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் ரூ.1 லட்சத்திற்கு கீழே வரும் என எதிர்பார்த்த இல்லத்தரசிகளுக்கு ஏமாறறமே.
தங்கத்தின் விலை ஏற்றம் ஒருபுறம் இருக்க, நேற்று தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகதது மேலும் ஏமாற்றத்தை அளித்தது.
நேற்று (ஆகஸ்ட் 5) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில், மதியம் மீண்டும் ரூ.960 உயர்ந்தது. இதன்படி ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனையானது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாற்றமில்லாமல் விற்பனையான வெள்ளியின் விலை நேற்று ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.240-க்கு விற்பனையானது.
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 6) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,160 உயர்ந்து, ரூ.1,10,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்ளில் தங்கத்தின் விலை ரூ.4,400 உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து, ரூ.250-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,50,000-க்கு விற்பனையாகிறது.
சாமானிய மக்கள் தங்கத்தை வாங்குவதற்கு சேமிப்பு மட்டுமே ஒரே வழி என்றாகி விட்டது. ஆகையால் நகைக் கடைகளில் மாதாந்திர நகைச் சீட்டில் பணம் சேமித்து தங்கத்தை வாங்கும் திட்டங்களுக்கு தற்போது மவுசு கூடியுள்ளது. தங்கம் வாங்க நினைப்பவர்கள் சேமிப்பில் ஆர்வம் காட்டுவதே புத்திசாலித்தனம்.
கடந்த மாதம் 2026 ஜூலை 6-ல் தங்கத்தின் விலை:
1 கிராம் - ரூ.13,560 1 சவரன் ரூ.1,08,480
கடந்த மாதம் 2026 ஜூலை 6-ல் வெள்ளியின் விலை:
1 கிராம் - ரூ.250
கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 6-ல் தங்கத்தின் விலை:
1 கிராம் - ரூ.9,380 1 சவரன் ரூ.75,040
கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 6-ல் வெள்ளியின் விலை:
1 கிராம் - ரூ.126
ஒரு மாதத்திற்கு முன்பிருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலைக்கும், தற்போதைய விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் ஓராண்டிற்கு முந்தைய விலை நிலவரங்களைப் பார்க்கும் போது, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பொருளாதார நிபுணர்களின் கணிப்பைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தான் பாதுகாப்பான முதலீட்டுக்கு தங்கம் மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதை பலருக்கும் உணர்த்தியது
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.