ஆடி வெள்ளியில் ஆறுதல் அளித்த தங்கம்.! இன்றைய விலை நிலவரம் இதோ.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
Updated on

ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை குறையும் என்றே வல்லுநர்கள் கணித்தனர். ஆனால் கணிப்புக்கு எதிர்மாறாக கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,400 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளது.

ஜூலை மாதத்தில் தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாத நிலையில், ஆகஸ்ட் மாதத்திலாவது ரூ.1 லட்சத்துக்கு கீழே வரும் என சாமானிய மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த விலை உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5) தங்கத்தின் விலை இருமுறை உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 6) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 வரை உயர்ந்தது. இதன்படி ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை நேற்று ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.250-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் விலை உயர்வால் தான், இந்திய சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் தற்காலிகமானது தான். இதற்குப் பிறகு விலை குறையவும் வாய்ப்புள்ளது.

நகைப் பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 7) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,10,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,750-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை குறித்த எவ்வித அறிவிப்பும் வராத சூழலில், தங்கத்தின் விலையேற்றம் பெண்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாவது, சற்று ஆறுதலை அளித்துள்ளது.

Gold
Gold
இதையும் படியுங்கள்:
வெள்ளியில் முதலீடு செய்தால் பலன் கிடைக்குமா?
தங்கம் விலை

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஆகஸ்ட் 6: 1 கிராம் - ரூ.13,750 1 சவரன் ரூ.1,10,000

ஆகஸ்ட் 5: 1 கிராம் - ரூ.13,480 1 சவரன் ரூ.1,07,840

ஆகஸ்ட் 4: 1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600

ஆகஸ்ட் 3: 1 கிராம் - ரூ.13,250 1 சவரன் ரூ.1,06,000

ஆகஸ்ட் 2: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஆகஸ்ட் 6: 1 கிராம் - ரூ.250

ஆகஸ்ட் 5: 1 கிராம் - ரூ.240

ஆகஸ்ட் 4: 1 கிராம் - ரூ.235

ஆகஸ்ட் 3: 1 கிராம் - ரூ.235

ஆகஸ்ட் 2: 1 கிராம் - ரூ.235

நீண்ட கால தங்க முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிதித் திட்டமிடல் உள்ளிட்ட காரணங்களுக்காக பலரும் தங்கத்தின் தினசரி விலையை கண்காணித்து வருகின்றனர்.

நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்க காலங்களில், பாதுகாப்பான முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாக தங்கம் கருதப்படுகிறது. இதன் காரணமாகத் தான் விலை உயர்ந்தாலும் தங்கத்தின் மீதான முதலீடுகள் மட்டும் குறைவதில்லை.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com