

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலையில் ஏற்றமே இல்லை. ஆகஸ்ட் 4-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,05,600-க்கு விற்பனையானது. ஆனால் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.5,600 வரை உயர்ந்து ரூ.1,11,200-க்கு விற்பனையானது. இந்த திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விலை உயர்ந்து வருகிறது. இதனால், தங்கம் மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழே இறங்குமா என்பது சந்தேகம் தான்.
நேற்று (ஆகஸ்ட் 7) காலை தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து அதிர்ச்சியளித்தது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,200-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 8) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.6,120 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியின் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இதன் தாக்கம் தான் தற்போது இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது. தங்கத்தின் மீதான முதலீடுகள் உயர்ந்த நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் நேற்று 4,258 டாலராக உயர்ந்துள்ளது.
அதேபோல் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 62.17 டாலராக உயர்ந்தது. இதன் காரணமாக வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை உயரும் என்றே கூறப்படுகிறது.
கடந்த மாதம் 2026 ஜூலை 8-ல் தங்கத்தின் விலை:
1 கிராம் - ரூ.13,330 1 சவரன் ரூ.1,06,640
கடந்த மாதம் 2026 ஜூலை 8-ல் வெள்ளியின் விலை:
1 கிராம் - ரூ.245
கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 8-ல் தங்கத்தின் விலை:
1 கிராம் - ரூ.9,470 1 சவரன் ரூ.75,760
கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 8-ல் வெள்ளியின் விலை:
1 கிராம் - ரூ.127
கடந்த ஒரு மாதத்திற்கும், ஒரு ஆண்டிற்கும் இடைய உள்ள விலை வித்தியாசமானது கிடடத்தட்ட 30%-கும் அதிகமாகும். கடந்த ஆண்டே தங்கத்தை வாங்கி இருந்தால் இன்றைய விலைக்கு ரூ.35,000 வரை மிச்சமாகி இருக்கும்.
தங்கத்தின் விலை மேலும் உயர்வை சந்திக்கும் என்பதால், இப்போது தங்கத்தை வாங்கினால் கூட லாபம் தான். ஏனெனில் அடுத்த ஆண்டில் தங்கத்தின் விலை நிச்சயமாக உயர்ந்திருக்கும
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.