ஆயுஷ்மான் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த 112 சிகிச்சைகள் இனி தனியார் மருத்துவமனைகளில் கிடைக்காது!

டிசம்பர் மாதம் முதல் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் உதவி பெறும் பயனாளிகளுக்கு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.
ayushman-bharat-pmjay|ஆயுஷ்மான் பாரத்
ayushman-bharat-pmjay|ஆயுஷ்மான் பாரத்
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

மத்திய அரசின் லட்சியத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி தன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் விதிமுறைகளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த 112 வகையான நோய் சிகிச்சை தொகுப்புகள் (Treatment packages) இனி அரசு மருத்துவமனைகளில் மட்டுமே முற்றிலும் இலவசமாகப் பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்பது இந்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இது 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம்தேதி தொடங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 2026 நிலவரப்படி, இத்திட்டத்தின் 8-ஆம் ஆண்டில் 60 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் காப்பீட்டு வசதியைப் பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் தகுதியான ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் சிகிச்சைக்காக பணமில்லா (Cashless) மற்றும் காகிதமில்லா காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி தன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் விதிமுறைகளில் மத்திய அரசு ஒரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது.

தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணத்தின்படி, தற்போது 112 நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான தொகுப்புகள் தனியார் மருத்துவமனைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படவுள்ளன.

இதன் மூலம், இனி பயனாளிகள் எந்தவொரு தனியார் மருத்துவமனையிலும் இந்த 112 நோய்களுக்கு இலவச சிகிச்சை பெற முடியாது. இந்த நோய்களுக்கான சிகிச்சைக்கு நோயாளிகள் இனி அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.

Ayushman Bharat Vaya Vandana
Medical Insurance

இத்தகைய சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் பெற விரும்பும் பயனாளிகள் இனி சொந்தச் செலவிலேயே மருத்துவம் பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதுவரை இத்திட்டத்தின் கீழ் 23 நோய் தொகுப்புகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 89 புதிய தொகுப்புகள் சேர்க்கப்பட்டு, இதன் எண்ணிக்கை 112 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில சுகாதார முகமைகளின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைப் பட்டியலில், அதிக ஆபத்துள்ள பிரசவங்கள், நான்கு வகையான கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள், அனைத்து நிலைகளிலான கருக்கலைப்பு, நீர்க்கட்டி, பயாப்சி, கடுமையான ரத்த சோகை, மஞ்சள் காமாலை, கண்புரை மற்றும் க்ளாக்கோமா அறுவை சிகிச்சை, கணைய அழற்சி, ஹெபடைடிஸ், மலேரியா,

இதையும் படியுங்கள்:
ஆயுஷ்மான் கார்டு வைத்திருந்தால் நாடு முழுவதும் இலவச சிகிச்சை..!
ayushman-bharat-pmjay|ஆயுஷ்மான் பாரத்

சிக்குன்குனியா மற்றும் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, மனநல கோளாறுகள், புற்றுநோயைக் கண்டறியும் பயாப்ஸி பரிசோதனைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஏடிஎச்டி சிகிச்சை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய மாற்றத்தின் மூலம் சி-செக்ஷன் (C-section) அறுவை சிகிச்சைகள், சிறுநீரகக் கற்கள் (kidney stones) சிகிச்சை உள்ளிட்ட 112 வகையான சிகிச்சைகளை இனி தனியார் மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவசமாக (Cashless) பெற முடியாது. இந்த 112 நோய்களுக்கு சிகிச்சை பெற விரும்பும் பயனாளிகள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே அணுக வேண்டியிருக்கும்.

இத்திட்டம் குறித்து மாநில அரசுகள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரும் நவம்பர் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வரும் டிசம்பர் 1-ம்தேதி முதல் இப்புதிய நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளின் அதிகப்படியான செலவைக் குறைப்பதும், அரசு மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆயுஷ்மான் பாரத் PMJAY: ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு – எப்படி அட்டை பெறுவது?
ayushman-bharat-pmjay|ஆயுஷ்மான் பாரத்

இத்திட்டத்தை நாடு முழுவதும் ஒரே சீராக வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குள் அமல்படுத்தக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.