நிஜமாகிறதா பாபா வாங்காவின் கணிப்பு? அன்றே சொன்ன மார்ச் - ஏப்ரல் போர்! அடுத்தது என்ன?

இந்தாண்டு போர் நிகழும் என்று பாபா வாங்கா முன்பே கணித்ததாக கூறப்படும் நிலையில், அவரின் கணிப்பு தற்போது நிஜமாகி விடுமோ என்ற பயம் மக்களிடையே எழுந்துள்ளது.
Baba Vanga Predictions
Baba Vanga Predictions
Published on

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த மூன்று நாட்களாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உங்களுக்கு நான் எந்த வகையிலும் சளைத்தவன் இல்லை என்று ஈரானும் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

பிப்ரவரி 28-ம்தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் சவுதி அரேபியா, குவைத், இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளை ஒரே நேரத்தில் குறி வைத்து தாக்குதல் பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து கமேனின் உயிரிழப்புக்கு ஈரான் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளதால், உலக நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றமான சூழலில் பாபா வாங்காவின் கணிப்புகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைலலாகி வருகிறது.

அதாவது, இந்தாண்டு (2026) போர் நிகழும் என்று பாபா வாங்கா முன்பே கணித்ததாக கூறப்படும் நிலையில், அவரின் கணிப்பு தற்போது நிஜமாகி விடுமோ என்ற பயம் மக்களிடையே எழுந்துள்ளது. உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் அவற்றில் பாபா வாங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல அவரது கணிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை. 1996ம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்துவிட்ட போதிலும், எதிர்காலம் குறித்த இவரது கணிப்புகள் இன்று வரை தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
'ஜப்பானின் பாபா வாங்கா' சொன்னதுதான் பலித்ததா? அப்படி என்ன சொன்னார்?
Baba Vanga Predictions

அந்த வகையில் பாபா வங்கா இறப்பதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.

அமெரிக்காவில் 9/11 தாக்குதல்கள், உயிரி ஆயுதங்களால் உலக அழிவு மற்றும் கோவிட் தொற்றுநோய் பரவல் போன்ற பல விஷயங்களை பாபா வாங்கா சரியாக கணித்து கூறியுள்ளார். இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. ஒட்டுமொத்த உலகத்துக்கே ஜாதகம் எழுதி வைத்து விட்டு சென்ற பாபா வாங்கா, கடந்தாண்டு (2025) அவர் கணித்த உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், இந்தியா-பாகிஸ்தான் போர், மியான்மர் உள்நாட்டு கலவரம் போன்றே பல கணிப்புகள் நடந்துள்ளது.

அந்த வகையில்,கடந்தாண்டை போலவே 2026-ம் ஆண்டிலும் மார்ச் முதல் ஏப்ரலுக்குள் ஒரு பெரும் உலகப்போர் தொடங்கும் என கணித்துள்ள பாபா வாங்கா,

அந்த போரில் முக்கிய வல்லரசு நாடுகள் ஈடுபடும் என்றும் உலகெங்கும் உள்ள கண்டங்களில் இந்த போர் பதற்றம் பரவும் எனவும் கணித்துள்ளார். அப்படி நடக்கும் பட்சத்தில் உலக நாடுகளிடையே பொருளாதார பிரச்சனை, கரன்சிகள் மதிப்பு சரிவு, வங்கிகள் திவால், பணவீக்கம் அதிகரிப்பு, நிதி நெருக்கடி போன்ற பிரச்சனைகள் தலைதூக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

மேலும் இந்தப் போரினால், உலகின் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் என்றும், ஐரோப்பாவின் நிலம் பேரழிவிற்கு உள்ளாகி, தரிசாகிவிடும் என்றும் போரின் முடிவில் ரஷ்யா ஒரு வல்லரசாக உருவாகும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். மேலும் ரஷ்யாவை சேர்ந்த ஒரு முக்கிய தலைவர் உலக அரசியல், மேடையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி பெரிய செல்வாக்கை பெற்றவராக உருவெடுப்பார் என்றும் தன்னுடைய கணிப்பில் பாபா வாங்கா தெரிவித்துள்ளார்.

அவர் கணித்தது தற்போது போலவே வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுடன் போரிட்டு வருவதால் பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகி விட்டதாகவே பலராலும் நம்பப்படுகிறது. ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேலுக்கும் இடையே வெடித்த போரால் உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதையும் படியுங்கள்:
‘2026-ல் தங்கம் விலை’: வெளியான ‘பாபா வாங்கா’வில் கணிப்பு- அதிர்ச்சியில் மக்கள்..!!
Baba Vanga Predictions

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004-ல் ஏற்பட்ட சுனாமி, ஒபாமா அமெரிக்க அதிபரானது ஆகியவற்றை, முன்கூட்டியே பாபா வாங்கா கணித்து கூறியது போல் நடந்துள்ளதால் அதுபோலவே தற்போதும் அவரது கணிப்பு நடந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com