வங்கியில் வேலை...டிகிரி போதும்: 11,403 காலியிடங்கள், தமிழகத்தில் மட்டும் 675!! உடனே அப்ளை பண்ணுங்க!

IBPS கிளார்க் ஆட்சேர்ப்புக்கான 11,403 காலிப்பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
IBPS Clerk Job Announcement
Bank Jobs 2026
Updated on

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 11,403 கிளர்க் (Customer Service Associate/Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வெளியிட்டுள்ளது.

வங்கித் துறையில் நிரந்தர வேலை பெற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட சுமார் 11 பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை உதவியாளர்களாக (Customer Service Associates - CAs) சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்

சம்பளம்: ரூ.24,050 : ரூ. 64,480

மொத்த காலிப்பணியிடங்கள் : 11,403

ஆட்சேர்ப்பு செய்யும் பொதுத்துறை வங்கிகள் : 11

விண்ணப்பிக்கும் செயல்முறை தொடங்கும் தேதி : ஆகஸ்ட் 1

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஆகஸ்ட் 21, 2026

விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல் : ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை

முதற்கட்டத் தேர்வு (Preliminary Exam) : அக்டோபர் 10 மற்றும் 11, 2026

முதன்மைத் தேர்வு (Main Exam) : டிசம்பர் 27, 2026

விண்ணப்ப கட்டணம்: ST/SC/PWD: ரூ.175, மற்றவர்களுக்கு: ரூ.850

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், அறிவிப்பு PDF-ஐப் பார்வையிட்டு, தகுதி வரம்புகளை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு 675 பணியிடங்கள்

இந்த ஆட்சேர்ப்பில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 675 கிளர்க் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநில வாரியாக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான பட்டதாரிகள் அதிக அளவில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மிஸ் பண்ணிடாதீங்க..! டிகிரி போதும்.. மாதம் ரூ.35,000 சம்பளம்! இந்தியன் ரெயில்வேயில் சூப்பர் வேலை..!!
IBPS Clerk Job Announcement

* அனுபவம் இல்லாதவர்களும் (Freshers) விண்ணப்பிக்கலாம் என்றாலும், ஆவணச் சரிபார்ப்பின் போது அவர்கள் தங்களது தகுதிக்குரிய பட்டச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

* வயது வரம்பு 20 முதல் 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு பொருந்தும்.

* விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் வாசிக்க, எழுத மற்றும் பேசும் திறனும் அவசியமாகும்.

அக்டோபரில் முதல் நிலைத் தேர்வு

முதல்நிலை ஆன்லைன் தேர்வு (Preliminary) அக்டோபர் 10 மற்றும் 11-ம்தேதிகளில் நடைபெறும்.

இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமான முதன்மை (Main) தேர்வில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். முதன்மை தேர்வு (Mains) டிசம்பர் 27-ம்தேதி நடைபெறும்

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் தரவரிசை, ஆவணச் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகளின் அடிப்படையில் இறுதி நியமனம் வழங்கப்படும்.

IBPS
IBPSAI Image

தேர்வு நடைபெறும் முறை

முதன்மைத் தேர்வு (Objective Test), முக்கியத் தேர்வு (Objective Test), நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல் நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத் திறன் மற்றும் தர்க்கத் திறன் (Reasoning) தொடர்பான வினாக்கள் இடம்பெறும்.

முதன்மைத் தேர்வில் பொது விழிப்புணர்வு, கணினி அறிவு, வங்கி தொடர்பான அடிப்படை அறிவு, கணிதம், தர்க்கத் திறன் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் இடம்பெறும்.

ஒவ்வொரு கட்டத் தேர்விற்கும் தனித்தனி தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு IBPS அதிகாரப்பூர் இணையதளமான ibps.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

* IBPS பணி நியமனச் செயல்முறைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

* முதலில் IBPS-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in-க்குச் சென்று, முகப்புப் பக்கத்தில், CRP CSA-XVI (IBPS Clerk 2026) பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

* அடுத்து இதில் பதிவு செய்ய உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்ட உடன் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் (password) கிடைக்கும்

* மேற்கூறிய விவரங்களைப் பயன்படுத்தி, கட்டாயத் தகவல்களுடன் உங்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

* முக்கியமாக விண்ணப்பிக்கும் மாநிலம் / யூனியன் பிரதேசத்தை கவனமாக தேர்வு செய்யவும்.

* நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்றவும்.

இதையும் படியுங்கள்:
டிகிரி போதும்..! மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை..! மொத்தம் 500 காலியிடங்கள்..!
IBPS Clerk Job Announcement

* பதிவுக்கான கட்டணத்தைச் செலுத்தி, உங்கள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து PDF நகலை சேவ் செய்து வைத்துக்கொள்ளவும்.

வங்கி வாரியான காலியிட விவரங்கள்:

கனரா வங்கி: 2,500

பஞ்சாப் நேஷனல் வங்கி: 2,016

இந்தியன் வங்கி: 1,700

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா: 1,419

பாங்க் ஆஃப் பரோடா: 1,200

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: 780

பாங்க் ஆஃப் இந்தியா: 500

பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா: 500

யூகோ வங்கி: 412

பஞ்சாப் & சிந்த் வங்கி: 376

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா: (NR)

மொத்தம்: 11,403

இதையும் படியுங்கள்:
பொதுத்துறை வங்கியில் வேலை: தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.. உடனே விண்ணப்பிங்க..!!
IBPS Clerk Job Announcement

விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பிப்பது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com