பெண்களுக்கு ஜாக்பாட்..! தேர்வு கிடையாது! கலெக்டர் ஆபீசில் வேலை...விண்ணப்பிப்பது எப்படி?

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Salem OSC Recruitment
Salem OSC RecruitmentAI Image
Updated on

தமிழக அரசு சேலம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கி வரும் சக்தி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (Sakhi One Stop Centre – Salem 1) காலியாக உள்ள பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper), வழக்கு பணியாளர் (Case Worker) மற்றும் காவலர் (Security Guard) ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் சமூகப்பணி (BSW/MSW) மற்றும் உளவியல் (Psychology) பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்த விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஆகஸ்ட் 21-ம்தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுடன் சேலம் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கான காலியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சேலம் வேலைவாய்ப்பு :

அலுவலகம் / இடம் (Office Location) : சேலம் மாவட்ட ஆட்சியரக வளாகம் (Salem District Collectorate Campus)

அமைப்பின் பெயர் : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை (Sakhi One Stop Centre, Salem)

வேலை வகை : தமிழக அரசு வேலை

பணியின் பெயர் : வழக்குப் பணியாளர், காவலர், பல்நோக்கு உதவியாளர்

மொத்த காலியிடங்கள் : 4 (Case Worker – 2, Security Guard – 1, Multi Purpose Helper – 1)

பணியிடம் : சென்னை, சேலம், தமிழ்நாடு

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, BSW / MSW / Psychology

மாத சம்பளம் : ரூ.10,000 முதல் ரூ.18,800 வரை

வயது வரம்பு : இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தபால் / நேரில் (Offline)

விண்ணப்பம் தொடங்கும் தேதி : 04.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.08.2026 (மாலை 5:00 மணி வரை)

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.salem.nic.in

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தை கட்டாயம் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சேலம் வேலைவாய்ப்பு
சேலம் வேலைவாய்ப்புAI Image

கல்வித் தகுதி (Educational Qualification)/முன் அனுபவம் (Experience) :

வழக்குப் பணியாளர் (Case Worker) :

* BSW / MSW / Psychology பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு அமைப்புகளில் 3 ஆண்டுகள் அனுபவம் வேலை செய்த அனுபவம் இருப்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

காவலர் (Security Guard) :

* குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (10th Pass) பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

* அரசு / தனியார் அலுவலகத்தில் காவலாளியாக 2 ஆண்டுகள் வேலை பார்த்திருக்க வேண்டும்.

பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) :

* குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (10th Pass) பெற்றிருக்க வேண்டும்.

* அரசு / தனியார் அலுவலகத்தில் காவலாளியாக 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.

முக்கிய நிபந்தனைகள் (Important Eligibility Rules) :

பெண்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

குறிப்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

24 மணி நேர சுழற்சி முறையில் பணி (Shift System) செய்ய முடிந்தவராக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
டிகிரி போதும்..! மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை..! மொத்தம் 500 காலியிடங்கள்..!
Salem OSC Recruitment

தேர்வு முறை :

* பெறப்பட்ட விண்ணப்பங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் தேவையான பணி அனுபவத்தின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு (Interview) அழைப்படுவார்கள்.

* நேர்முகத் தேர்வின் போது கல்விச் சான்றிதழ்கள், முன் அனுபவச் சான்றிதழ், இருப்பிடச் சான்று மற்றும் பிற ஆவணங்களின் அசல்கள் சரிபார்க்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ இணையதளமான www.salem.nic.in பக்கத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் (Download) செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் (Self-attested certificates) இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் ஆகஸ்ட் 21-ம்தேதி மாலை 05:00 மணிக்குள் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரியலாகவோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கப் பெற செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வங்கியில் வேலை...டிகிரி போதும்: 11,403 காலியிடங்கள், தமிழகத்தில் மட்டும் 675!! உடனே அப்ளை பண்ணுங்க!
Salem OSC Recruitment

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி (Postal Address) :

மாவட்ட சமூக நல அலுவலர்,

மாவட்ட சமூக நல அலுவலகம்,

அறை எண்: 126, முதல் தளம்,

மாவட்ட ஆட்சியரகம், சேலம் – 636001.

logo
Kalki Online
kalkionline.com