#BREAKING: தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார் ராகுல் காந்தி.!

Congress Party
Rahul Gandhi
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில் ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 20-ம் தேதி திங்கட்கிழமை மீண்டும் வருகிறார் ராகுல் காந்தி. திங்கட்கிழமை தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: பீகார் பிரபலத்தை களத்தில் இறக்கிய முதல்வர் ஸ்டாலின்.!
Congress Party

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூரில் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும், இன்று தமிழகத்தின் கோவையில் பிரச்சாரம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இருந்து இரண்டு முக்கிய தலைவர்கள் இன்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

மேலும் பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஸ்டாலின் உடன் இணைந்து பிரச்சாரம் செய்கிறார். இதன்மூலம் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: TVK பற்றி கவலையே இல்லை.. NDA vs DMK தான்... நயினார் நாகேந்திரன்.!
Congress Party
logo
Kalki Online
kalkionline.com