#BREAKING: தங்கம் விலை ரூ.1,200 குறைவு.! இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.!

gold price
gold rate
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால் வரலாற்றில் முதன்முறையாக நடப்பாண்டில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தைக் கடந்து, இல்லத்தரசிகள் உள்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தங்கத்தின் இந்த விலையேற்றம் நடுத்தர வர்க்கத்தினருக்கு கவலையை ஏற்படுத்தி வந்தாலும், முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது.

நேற்று (ஏப்ரல் 28) ஒரு கிராம் தங்கம் ரூ.14,100-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,12,800-க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,200 குறைந்து, ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கும் விற்கப்படுகிறது

இதையும் படியுங்கள்:
தங்கம், வெள்ளி அல்ல… செல்வ வளத்தை உருவாக்கும் ரகசியம் இதுதான்!
gold price

வாரத்தின் முதல் நாள் சற்று ஏறிய தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,040 குறைந்து. தங்கம் விலை குறைந்தது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்றும் ரூ.1,200 குறைந்திருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒருவர் தன் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க அனுமதி..? வெளியான முக்கிய தகவல்..!
gold price
logo
Kalki Online
kalkionline.com