#BREAKING: அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரான் கப்பல்களை தடுத்து நிறுத்திய அமெரிக்க கடற்படை.!

America Iran War
America
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் நாளை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் ஈரான் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தும் பணியில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டு வருகிறது.

இதன் படி தற்போது வரை ஈரானுக்குத் தொடர்புடைய 6 முதல் 8 கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள்:
#JUST IN: இன்று சென்னையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி - அடுத்தது பிரஸ் மீட் தான்!
America Iran War

ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதையடுத்து, அதனை திறக்கும் நடவடிக்கையாக ஈரான் கப்பல்களை முற்றுகையிட அமெரிக்கா களத்தில் இறங்கியது. அமெரிக்காவின் இந்த செயல்பாட்டுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இவ்வழியில் ஈரான் துறைமுகத்திற்கு செல்லாத மற்ற நாட்டு கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை அனுமதி அளித்துள்ளது.

ஈரான் எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால், தற்போது ஈரானுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில், போர் முடிவுக்கு வருவதற்கான தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: மோடி - இபிஎஸ் மெகா ரோடு ஷோ.! தென்னகத்தில் அதிரும் அரசியல் களம்!
America Iran War
logo
Kalki Online
kalkionline.com