ஜியோ,ஏர்டெல்லுக்கு ஆப்பு வைத்த BSNL! ₹1-க்கு புதிய SIM Card + 1 மாத ரீசார்ஜ்..! வாங்குவது எப்படி?

பிஎஸ்என்எல் நிறுவனம், சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக வாடிக்கையாளர்கள் வெறும் ஒரு ரூபாய் மட்டும் செலுத்தி புதிய SIM கார்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
BSNL
BSNL
Updated on

பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் ஒரு ஸ்பெஷல் புரொமோஷனல் ஆஃபருடன் களமிறங்கியுள்ளது. இந்தியாவின் நம்பகமான பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல் - BSNL), நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘சுதந்திர தின திட்டத்தை’ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த முயற்சி, இந்தியாவின் 80-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க குடிமக்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இந்த புரொமோஷனல் ஆஃபரில், வழக்கமாக முதல் ரீசார்ஜுக்கு செலுத்த வேண்டிய தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களான ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோவுக்கு (Jio) போட்டியாக 'FREEDOM 2.0' என்ற ஆஃபரை (BSNL ஆஃபர்) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் இலவச கால்ஸ், டேட்டா, எஸ்.எம்.எஸ் கிடைக்கும்.

ரூ.1 கட்டணத்தில் இலவச சிம் கார்டு சலுகையை பெறும் வாடிக்கையாளர்கள் அதனுடன் சேர்ந்து 24 நாட்கள் வேலிடிட்டி வரை எந்தவித கூடுதல் ரீசார்ஜும் செய்யாமல் இலவசமாக அன்லிமிடெட் (Unlimited) வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 இலவச SMS வசதி மற்றும் டேட்டாவையும் பெற முடியும். வரும் செப்டம்பர் 12-ம்தேதி வரை ஃப்ரீடம் 2.0 திட்டத்தின் கீழ் வெறும் ரூ.1 கட்டணத்தில் இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்த சிறப்புச் சலுகை புதிதாக பிஎஸ்என்எல் சிம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே பிஎஸ்என்எல் சிம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஆஃபர் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் 4G சேவைக்கு மாற விரும்புபவர்களுக்காகவும் இந்தச் சிறப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த ஃப்ரீடம் ஆஃபருடன், பிஎஸ்என்எல் தனது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் ஒரு குட் நியூஸ் கொடுத்துள்ளது. ரூ.2,399 வருடாந்திர பிளானில் கூடுதல் வேலிடிட்டியை அறிவித்துள்ளது.

SIM card|BSNL ஆஃபர்
SIM car|BSNL ஆஃபர்

செப்டம்பர் 12-க்குள் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 365 நாட்களுக்குப் பதிலாக 412 நாட்கள் (கூடுதலாக 47 நாட்கள்) வேலிடிட்டி கிடைக்கும். இந்த பிளானில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் நன்மைகள் உள்ளன.

நெட்வொர்க் இணைப்புகள் கிடைக்காத கடல் பகுதிகள், அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் தொடர்பில் இருக்க உதவி செய்யும் வகையில், பிஎஸ்என்எல் முதன்முறையாக சேட்டிலைட் போன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ரூ.1,111 எப்டிடிஎச் திட்டம் உள்ளிட்ட பிற சேவை மற்றும் சிறப்புச் சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

BSNL தனது நெட்வொர்க் சேவையை மேம்படுத்தி வரும் சூழலில் இந்த சிறப்பு ஆஃபர் புதிய வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தீபாவளியை முன்னிட்டு சலுகைகளை வாரி வழங்கும் ‘BSNL’..! 1 ரூபாய்க்கு சிம் கார்டு வாங்கினால் ஒரு மாத காலத்திற்கு இலவச 4ஜி சேவை..!
BSNL

மேலும் குறிப்பிட்ட ரீசார்ஜ் பிளான்களைத் தேர்ந்தெடுக்கும்போது கூடுதல் வேலிடிட்டி அல்லது ஒரு மாதத்திற்கான வரம்பற்ற அழைப்புகள் (Unlimited Calls) மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆஃபரைப் பெற அருகிலுள்ள BSNL Customer Service Centre (CSC) அல்லது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களை அணுகி உங்களது ஆதார் கார்டு (Aadhaar Card) விவரங்களை வழங்கி புதிய சிம் கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது பிஎஸ்என்எல் 'ஆசாதி கா பிளான்' என்ற பெயரில் ஒரு ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் வசதி என்ற சிறப்பு ஆஃபரை வழங்கியது.

இதையும் படியுங்கள்:
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு செக்! BSNL - வோடபோன் அதிரடி கூட்டணி..!
BSNL

ஆனால் தற்போதைய வழங்கப்பட்டுள்ள 'ஃப்ரீடம் பிளான் 2.0'-ல் வேலிடிட்டி 24 நாட்களாகவும், டேட்டா 1 ஜிபி ஆகவும் குறைக்கப்பட்டிருந்தாலும், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கூடுதலாக தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com