வீடு காலி செய்யும்போது பெயிண்டிங் செலவை அட்வான்ஸில் பிடிக்கலாமா? சட்டம் சொல்வது என்ன?

வீடு காலி செய்யும்போது வீட்டு உரிமையாளர் டெபாசிட் பணத்தை பிடித்தம் செய்கிறாரா? சட்டம் உண்மையில் என்ன சொல்கிறது என்பது இதோ.
landlord charge|வாடகை அட்வான்ஸ்
landlord charge|வாடகை அட்வான்ஸ்AI Image
Updated on

இந்தியாவில் வாடகை வீட்டை விட்டு வெளியேறும் வாடகைதாரர்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான சிக்கலை எதிர்கொள்கின்றனர். டெபாசிட் தொகையில் (security deposit) எவ்வளவு தொகையை வீட்டு உரிமையாளர் சட்டப்பூர்வமாகத் தக்கவைத்துக்கொள்ள முடியும்? என்பது தான். இந்தியாவில் சமீபத்திய தகவல்கள் மற்றும் நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட வாடகை நடைமுறைகளின்படி, பொதுவாக சுவரில் உள்ள வர்ணம் மங்குதல், வழக்கமான சுத்தம் செய்தல் மற்றும் காலப்போக்கில் ஏற்படும் இயல்பான தேய்மானம் ஆகியவற்றிற்கான செலவுகளை வாடகைதாரரின் டெபாசிட் தொகையில் இருந்து பிடித்தம் செய்ய முடியாது. மாறாக, இத்தகைய செலவுகள் இயல்பான தேய்மானமாகக் கருதப்படுவதால், அவற்றைச் சரிசெய்வது வீட்டு உரிமையாளரின் பொறுப்பாகவே கருதப்படுகிறது.

இந்தியாவில் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் வாடகைக்கு குடியிருப்போர், வீட்டின் உரிமையாளர் மூலம் பல்வேறு சவால்களையும், நெருக்கடிகளையும், கட்டுப்பாடுகளையும் சந்திக்கிறார்கள்.

குறிப்பாக, வீட்டு வாடகை திடீரென உயர்த்துதல், குடிநீர் கட்டணம், மின் கட்டணம் வசூலித்தலில் கெடுபிடி, உறவினர்கள், விருந்தினர்கள் திடீரென வந்துவிட்டால் வீட்டு உரிமையாளரிடம் இருந்து குடைச்சல்கள், முன்பணம் அதிகமாகக் கேட்டல், பராமரிப்புச் செலவு, மதம் ரீதியான சிக்கல்கள், உணவு பழக்கங்கள் ரீதியான கெடுபிடிகள், செல்லப் பிராணிகள் வளர்க்க அனுமதி, குழந்தைகள் அதிகம் இருந்தால் தண்ணீர் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு என பல்வேறு கிடுக்கிப்பிடிகளை வாடகைக்கு குடியிருப்போர் எதிர்கொள்கிறார்கள்.

அதிலும் குழாயில் ஏதேனும் அடைப்பு, பழுதுநீக்குதல், வீட்டின் பராமரிப்பு செலவு, மாநகராட்சி ஊழியர்களுக்கு ஏதேனும் பணம் கொடுத்தால்கூட அதிலும் வாடகை தாரர்களிடமிருந்து வசூலிக்கும் நிலைமை ஏற்படுகிறது. உண்மையில், வீட்டின் பராமரிப்பு செலவு, பழுதுநீக்கும் செலவு யாருடையது, வீட்டை பயன்படுத்தும் வாடகைதாரருடையதா அல்லது உரிமையாளருக்கு பொறுப்பா என்ற கேள்வி இரு தரப்புக்கும் இடையே பெரிய நீண்டநாளாக இருந்து வருகிறது.

மறுபுறம் வாடகைத்தாரர் வீட்டை காலி செய்யும் போது வீட்டு உரிமையாளர்கள் ஒவ்வொரு ஸ்விட்ச், பல்பு, பெயிண்ட், சுத்தம் செய்ய என சின்ன சின்ன விஷயத்திற்கும் டெபாசிட் பணத்தில் (security deposit) பிடித்தம் செய்து விடுகிறார்கள்.

இந்நிலையில் ஒருவர் (வாடகைத்தாரர்) வீட்டை காலி செய்யும் போது சுவற்றில் பெயிண்ட் அடிப்பதற்காக, சிறு சிராய்வு போன்ற விஷயங்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் டெபாசிட் பணத்தை பிடிக்க கூடாது. இவை அனைத்தும் வீட்டை பயன்படுத்தும் போது இயற்கையாக நடக்கும் ஒரு wear and tear விஷயம், இதற்கு வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

சட்டம் கூறுவது என்ன? எப்போதெல்லாம் டெபாசிட் பணத்தை குறைக்கலாம்?

டெபாசிட் தொகையிலிருந்து வீட்டு உரிமையாளர் எந்தெந்தச் சூழல்களில் நியாயமான பிடித்தங்களைச் செய்யலாம் என்பதை பெரும்பாலும் வாடகை ஒப்பந்தத்தில் (வாடகை அட்வான்ஸ்) உள்ள விதிமுறைகள் தீர்மானிக்கின்றன.

rental agreement
rental agreementAI Image

'சொத்து பரிமாற்றச் சட்டம், 1882'-ன் பிரிவு 108(m)-ன் படி, வாடகைக்கு குடியிருக்கும் காலத்தில் அந்த வீட்டை நல்ல நிலையில் பராமரிக்கவும், வீட்டை காலிசெய்யும் போது அதை அதன் அசல் நிலைக்கு, அதாவது, அந்த வீட்டிற்கு வாடகைக்கு வரும் போது எப்படி இருந்ததோ அப்படி திருப்பிக் கொடுக்கவும் வாடகைத்தாரர் கடமைப்பட்டுள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டும் தகவல்களின்படி, சொத்தைப் பயன்படுத்தும்போது இயற்கையாகவே ஏற்படும் தேய்மானத்திற்கு (normal wear and tear) இது பொருந்தாது. அதாவது வழக்கமான பயன்பாட்டினால் ஏற்படும் தேய்மானம் மற்றும் பழுதுகளுக்கான செலவுகளை (வழக்கமான சுண்ணாம்பு அடித்தல் மற்றும் வர்ணம் பூசுதல் உட்பட) பொதுவாக வீட்டு உரிமையாளரே ஏற்க வேண்டும். அன்றாடப் பயன்பாட்டினால் சுவர்களின் நிறம் மங்குதல், சிறிய கீறல்கள் அல்லது இயல்பான நிறமாற்றம் போன்றவை ஏற்பட்டால், அதற்கான தொகையை வாடகைத்தாரரின் டெபாசிட் பணத்திலிருந்து (deposit) தானாகவே பிடித்தம் செய்யக்கூடாது. எனவே, காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது சாதாரண பயன்பாட்டினால் ஏற்படும் அறிகுறிகள் அனைத்திற்கும் வாடகைதாரர் பொறுப்பல்ல.

இருப்பினும், வழக்கமான பயன்பாட்டிற்கு அப்பாற்பட்ட சேதங்களுக்குப் பிடித்தம் செய்யலாம். உதாரணமாக உடைந்த சாதனங்கள், சுவரில் ஆழமான துளைகள், கடுமையான சுவர் சேதம் அல்லது கவனக்குறைவால் ஏற்படும் அதிக செலவு பிடிக்கும் பழுதுகள் போன்றவற்றிற்கு பிடித்தம் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
வாடகைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு தந்த அதிரடி சட்டப் பாதுகாப்பு தெரியுமா?
landlord charge|வாடகை அட்வான்ஸ்

ஆனால் வீட்டு உரிமையாளர் அதற்கான ஆவணங்கள், செலவு செய்ததிற்கான பில் மற்றும் இதர ஆதாரங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்த விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேசமயம் அடுத்த வாடகைதாரருக்காக வீட்டைத் தயார் செய்வதன் ஒரு பகுதியாக, வழக்கமான தூசு மற்றும் சிறிய அழுக்கை அகற்றுவது 'சாதாரண பராமரிப்பு' (ordinary turnover maintenance) என்றே கருதப்பட வேண்டும். இதற்காக இதற்கு முன்பு இருந்த வாடகைதாரரிடம் இதற்கான கட்டணத்தை வசூலிக்கக்கூடாது.

வாடகைத்தாரர் குடியிருந்த வீட்டு கதவுகள், ஜன்னல்கள், பைப், ஸ்விட்ச் போன்றவை உடைந்திருந்தால் டெபசிட் பணத்தை குறைக்கலாம், சுவரில் பெரிய ஓட்டை, சுவரில் பாதிப்பு போன்றவை இருந்தால் பணத்தை குறைக்கலாம்.

வீட்டில் குடியிருப்பவர்களின் கவன குறைவால் வீட்டில் இருக்கும் அமைப்புகளில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் கட்டாயம் அதற்கு பணம் வசூலிக்கலாம், வாடகைத்தாரரின் செயலால் வீட்டின் உரிமையாளர்களுக்கு பெரும் செலவு ஏற்பட்டால் இதற்கான தொகையும் வசூலிக்கலாம்.

பிடித்தம் நியாயமானதா என்பதைத் தீர்மானிப்பதில் வாடகை ஒப்பந்தம், குடியேறும்போதும், வெளியேறும்போதும் குடியிருந்த வீட்டின் நிலை மற்றும் ஏற்பட்ட உண்மையான செலவு ஆகியவை முக்கியமானவை.

இதையும் படியுங்கள்:
வீட்டு உரிமையாளர் Vs வாடகைதாரர்: இந்த இரு தரப்பும் சந்தோஷமாக இருக்க என்ன வழி?
landlord charge|வாடகை அட்வான்ஸ்

இருப்பினும், வாடகைதாரர் அதிகப்படியான குப்பை, அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு, கடுமையான கறைகள் அல்லது தீவிர சுத்தம் தேவைப்படும் சுகாதாரமற்ற சூழலில் வீட்டை விட்டுச் சென்றால், நியாயமான பிடித்தத்தைக் கோருவதற்கு வீட்டு உரிமையாளருக்கு உரிமை உள்ளது.

இதுபோன்ற மோதல்களைத் தவிர்க்க, வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இருவரும் குடியேறும்போதும், வெளியேறிய பிறகும் சொத்தின் நிலையை வீடியோ ஆதாரமாகப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

- ஒட்டுமொத்தமாக, வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன் இரு தரப்பினரும் பிடித்தம் தொடர்பான விதிமுறைகளை முறையாக விவாதிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
காலி செய்ய மறுத்த வாடகைதாரர்...வீட்டு சொந்தக்காரருக்கு சாதகமாக தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்..!!
landlord charge|வாடகை அட்வான்ஸ்

மேலும் வீட்டு உரிமையாளர்களும் சரி, வீட்டில் குடியிருப்பவர்களும் சரி தங்களுடைய உரிமையை புரிந்துக்கொண்டு செயல்பட்டால் வீட்டை காலி செய்யும் போது இத்தகைய பிரச்சனைகள் வராது. அப்படி வந்தாலும் சட்டம் உங்களுக்கு துணை நிற்கும்.

logo
Kalki Online
kalkionline.com