ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதி..! புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடியாக குறைந்தது..!

புற்றுநோய் மருந்துகளை வாங்குபவர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் 543 மருந்துகளின் விலையை அதிரடியாக குறைந்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
புற்றுநோய் மருந்து
புற்றுநோய் மருந்துAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

நாட்டில் புற்றுநோய்களுக்கான சிகிச்சை அளிப்பில் மருந்துகளின் விலை மிகக்கடுமையாக உள்ளது. இதனால் அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு ஒரு குடும்பத்தையே நலிவடையச் செய்துவிடுகிறது.

சில சமயங்களில் மருந்துகளை வாங்க முடியாமல் பல உயிர்களை தொலைத்தவர்களும் உண்டு. இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மருந்துகளில் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது.

ஏற்கனவே, அதிகப்படியான வர்த்தக லாப வரம்புகளை கட்டுப்படுத்தவும், புற்றுநோய் சிகிச்சையை மேலும் மலியானதாக மாற்றவும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் அட்டவணைப்படுத்தப்படாத 137 மருந்துகளுக்கான வர்த்தக லாப வரம்பு சீரமைப்பை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) கடந்த 17-ந்தேதி அறிவித்தது.

அதனை தொடர்ந்து, e. மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பு புற்றுநோய் நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஒரு மிகப்பெரிய நிதி நிவாரணமாக அமைந்துள்ளது.

மார்பக புற்றுநோய், கருக்குடா/கருப்பை வாய் புற்றுநோய், புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்கான மருந்துகளின் விலைகள் இதில் குறைக்கப்பட்டுள்ளன.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) 137 அத்தியாவசியமற்ற புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை (Trade Margin) 30% ஆகக் கட்டுப்படுத்தியதன் மூலம், சந்தையில் உள்ள 543 பிராண்டட் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) 70% முதல் 96.45% வரை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் 543 ‘பிராண்டு’களுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை நவம்பர் 9-ம்தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது.

மார்பக புற்றுநோய்க்கான Palbociclib விலை ரூ.40,412-ல் இருந்து ரூ.2,720 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆர்பிஜி லைப் சயின்சஸ் நிறுவனத்தின் புல்பிராக்கா ஊசி மருந்து தற்போது ரூ.26,072-ல் இருந்து ரூ.5,490 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே நிறுவனத்தின் டாப்ருமாப் ஊசிமருந்து ரூ.22,031.25-ல் இருந்து ரூ.5,941 ஆகவும், மார்பக புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அனஸ்ட்ரோசோல் மருந்து 10 மாத்திரைகள் ரூ.695.75-ல் இருந்து ரூ.73 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அபோட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பெவாசிசுமாப் மருந்து ரூ.22,031.25-ல் இருந்து ரூ.5,930.13 ஆகவும், Thiotepa கீமோதெரபி ஊசி விலை ரூ.80,072ல் இருந்து ரூ.7,150 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! இனி மருந்து செலவு மிச்சம்! அதிரடியாக குறையும் புற்றுநோய் மருந்துகளின் விலை.!
புற்றுநோய் மருந்து

இந்த விலை குறைப்பு நடவடிக்கையின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,500 கோடி முதல் ரூ.3,540 கோடி வரை மருத்துவச் செலவு மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து மருந்து சில்லறை விற்பனையாளர்கள், மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது வளாகத்திலும் இணையதளத்திலும் திருத்தப்பட்ட புதிய விலைப் பட்டியலை முக்கியமாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி பொதுமக்கள் 543 மருந்துகளின் திருத்தப்பட்ட முழுமையான புதிய மருந்து விலை பட்டியல் ஃபார்மா சஹி தாம் (Pharma Sahi Daam) மொபைல் செயலி அல்லது http://nppa.gov.in என்ற இணையதளம் மூலமும் சரிபார்த்துக்கொள்ளலாம்.

திருத்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக மருந்து விற்பனை நிலையமோ அல்லது மருத்துவமனை மருந்தகமோ மருந்துகளை விற்க முடியாது. எனினும் மருந்துகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால் அல்லது மருந்து விலை தொடர்பாக புகார்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்ள் ஃபார்மா ஜன் சமாதான் (Pharma Jan Samadhan) இணைய பக்கம் மூலமாகவோ அல்லது 1800-111-255 என்ற உதவி எண்ணிலோ அல்லது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ‘Pharma Sahi Daam’ செயலி மூலமாகவோ தங்களுடைய குறைகளை பதிவு செய்யலாம் என்றும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க பெண்கள் தினமும் சாப்பிட வேண்டிய அற்புத உணவுகள்!
புற்றுநோய் மருந்து

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) எடுத்துள்ள இந்த நடவடிக்கை, புற்றுநோய் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தவும், நோயாளிகள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும் பெரிதும் உதவும்.