மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க பெண்கள் தினமும் சாப்பிட வேண்டிய அற்புத உணவுகள்!

சிலுவை காய்கறிகள், மாதுளை மற்றும் தயிர் மூலம் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும் வழிகள்.
Breast cancer
Breast cancerImage Credit: Pintrest
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

உலகளவில் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று மார்பக புற்றுநோய். மார்பகத்தில் உள்ள செல்கள், கட்டுப்பாடு இன்றி பெருகும் நிலையில் புற்றுநோய் கட்டி ஏற்படுகிறது. கட்டுக்குள் வைக்கப்படாவிட்டால் கட்டிகள் உடல் முழுவதும் பரவி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

கேன்சர் செல்களை தூண்டும் பல காரணிகள் உடலில் உள்ளன. எனவே பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவுமுறைக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. நாம் உண்ணும் உணவு நேரடியாகப் புற்றுநோயை உண்டாக்காது என்றாலும், சில ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கின்றன. அதே நேரத்தில், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பைட்டோ கெமிக்கல்ஸ் நிறைந்த சத்தான உணவுகள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து மார்பகப் புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சில குறிப்பிட்ட உணவுகள் மார்பக புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்கும். அதற்கு அவைகளில் உள்ள சில தாவரக்கூறுகள் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவைகளை பற்றி இங்கே பார்க்கலாம்..

முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவற்றில் இன்டோல்ஸ் எனும் பைட்டோ கெமிக்கல்ஸ் உள்ளது. இது உடலில் எஸ்ட்ரோஜன் சுரப்பியின் ஓட்டத்தில் சம நிலையை உருவாக்கி புற்றுநோய் செல்களை உருவாகாமல் தடுக்க உதவும் என்கிறார்கள். சிலுவை காய்கறிகள் என்று அழைக்கப்படுகிற காலிஃப்ளவர், ப்ரக்கோலி போன்றவைகளை தவிர்த்து, பீன்ஸ், சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், பச்சை கீரைகள் போன்றவைகளிலும் இந்த தாவரக்கூறுகள் உள்ளது. இவை மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

சில காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் பைட்டோ எஸ்ட்ரோஜன்கள் அளவுக்கு அதிகமான எஸ்ட்ரோஜன்கள் அளவை உடலில் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. இது சோயா பீன்ஸ், ஆளிவிதை, நிலக்கடலை, எள், பீன்ஸ், பீச், பெர்ரி பழங்கள் மற்றும் உலர் பழங்களிலும் உள்ளது.

குறிப்பிட்ட அளவு பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களை எடுத்துக்கொள்வது மார்பக புற்றுநோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள், மாதவிடாய் நின்ற அறிகுறிகள், பதட்டம் மற்றும் பாதிப்புக் கோளாறுகள் உள்ளிட்ட வயது தொடர்பான நோய்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாகவே 4 லில் 3 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என்கிறார்கள்.

மாதுளம் பழத்தில் இயற்கையாகவே இருக்கும் பைட்டோ கெமிக்கல் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் என்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் நிறம் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள், காய்கறிகளில் 'கரோட்டின்' எனும் வேதிப்பொருள் உள்ளது. இவைகளில் உறிஞ்சத்தக்க வைட்டமின் ஏ அதிகளவில் உள்ளதால் கேன்சர் உருவாகும் காரணிகளை ஒழிக்க உதவுகிறது. கேன்சர் கட்டிகள் கேரட் ஜூஸ் சாப்பிட சுருங்கிப் போவதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

Breast cancer
Breast cancerImage Credit: pintrest

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் மற்றும் பச்சை நிற கீரைகளில் வைட்டமின் சி, ஃபோலேட், கரோட்டினாய்டுகள், குவெர்செடின், ஹெஸ்பெரிடின் மற்றும் ஃபிளாவனாய்டு ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை அடங்கியுள்ளன. இந்த ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பொருட்கள் அடங்கியுள்ளன. இவைகள் உடலில் புற்றுநோய் செல்களை அழிக்க மற்றும் புற்றுநோய் செல்களை உருவாகாமல் தடுக்க உதவும்.

சிவப்பு நிற தக்காளி, தர்பூசணி மற்றும் கொய்யா பழத்தில் 'லைகோபீன் 'எனும் சத்து உள்ளது. இது கேன்சர் தடுப்பு மருந்து. பச்சை தக்காளியை விட அவித்த தக்காளியில் இது அதிகம்.

புற்றுநோய்யை தடுக்கும் காரணிகள் 'ஃபிளேவனாயிட்ஸ், கேடசின்ஸ்' எனும் பைட்டோ கெமிக்கல்களில்களில் உள்ளது. இவை பச்சை கருப்பு தேயிலையில் அதிகமுள்ளது. தினசரி பெர்ரீ பழங்களை எடுத்துக்கொள்வது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. ஏனெனில் இவற்றில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் சேதமடைவதை தடுத்து, கேன்சர் செல்கள் உருவாவதை தடுக்கிறது. ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இந்த பழங்களிலுள்ள பாலிபெனால் போன்ற ஆண்டி ஆக்சிடண்டுகள் கேன்சர் செல்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த பழங்களை தினசரி சேர்த்துக் கொள்வது புற்றுநோய் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது.

தினமும் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது என்கிறது புதிய ஆய்வு. தயிரில் உள்ள புரோபைட்டிக்ஸ் நன்மை தரும் பாக்டீரியாக்களை உருவாக்கி மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உடையது என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கிறீர்களா? பெற்றோர்கள் செய்யக்கூடாத ஆபத்தான தவறுகள்!
Breast cancer

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் உணவில் குறைந்தது மூன்று வகையான மேற்கூறிய, இரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள் அவசியம் அன்றாடம் உணவில் இடம் பெற வேண்டும் என்கிறார்கள்.

புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு முக்கிய காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளது. இதனை தடுக்க வேண்டுமெனில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மைதா போன்ற ஸ்டார்ச் உணவுகள் மற்றும் ரீஃபைண்ட் எண்ணெய்களை தவிர்க்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் உணவுகள், துரித உணவுகளைத் தவிர்த்தால் அவசியம், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உடலில் வீக்கத்தினை உண்டாக்கி, புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது என்கிறார்கள்.

மார்பக புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆரோக்கியமான டயட், முறையான உடற்பயிற்சி, போன்றவைகள் மட்டும் அல்லாமல், 30 வயதுக்குப் பிறகு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். தாய்மார்கள் குழந்தைகளுக்கு குறைந்தது ஓராண்டு வரை கட்டாயம் பாலூட்ட வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரிக்க கவனம் செலுத்த வேண்டும். மாதவிலக்குக்கு இடைப்பட்ட நாட்கள், கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் போன்ற நேரங்களில் ஏற்படும் இயல்பான மாற்றங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால்தான், இயல்புக்கு மாறான மாற்றங்கள் தோன்றினால் அதை உடனே உணர முடியும். அதற்கு தகுந்த முறையில் நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் தாகம் எடுக்கவில்லையா? இதை கட்டாயம் படிங்க!
Breast cancer

Reference:

logo
Kalki Online
kalkionline.com