மத்திய அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளிக்க எண் அறிவிப்பு..!

மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் லஞ்சம் கோரினால் புகார் அளிக்கலாம்.
லஞ்சப் புகார்
லஞ்சப் புகார்
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கிகள் (Public Sector Banks), மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் (PSUs) அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (CVC) அல்லது மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) ஆகிய அமைப்புகளிடம் தாராளமாகப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில், லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த, தவெக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தலைமைச் செயலகம் தொடங்கி, கிராம நிர்வாக அலுவலகம் வரை, ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளன. அரசு அலுவலகங்களில் நடக்கும், லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், 'வாட்ஸ்அப் எண்' வெளியிடப்பட்டு உள்ளது.

அண்மையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) 2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. இதில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. பெறப்பட்ட மொத்த புகார்களில் வங்கித் துறை தொடர்பாக 9,933 புகார்களும், ரெயில்வே துறை தொடர்பாக 9,381 புகார்களும் பதிவாகி முதலிடத்தில் உள்ளன. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மீது 6,531 புகார்களும், உள்ளாட்சி அமைப்புகள் மீது 4,834 புகார்களும், நிலக்கரித் துறை பணியாளர்கள் மீது 4,118 புகார்களும், நிதித் துறை மீது 3,107 புகார்களும் பதிவாகியுள்ளன.

பதிவு செய்யப்பட்ட 70,584 புகார்களில், கடந்த டிசம்பர் 31-ம்தேதி நிலவரப்படி 64,905 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,679 புகார்கள் தற்போது விரிவான விசாரணையில் உள்ளதாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையே, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) சார்பில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், புகார் அளிக்க, 94444 42519 என்ற மொபைல் போன் வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் hobachchn@cbi.gov.in என்ற 'இ - மெயில்' முகவரியும் வெளியிடப்பட்டு உள்ளது.

ஊழல்|லஞ்சப் புகார்
ஊழல்|லஞ்சப் புகார்

இதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக, மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் புகாரளிப்பவரின் (லஞ்சப் புகார்) அடையாளம் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என விரும்பினால், PIDPI (Public Interest Disclosure and Protection of Informers) விதியின் கீழ் தபால் மூலம் மட்டுமே புகார் அனுப்ப வேண்டும். கடிதத்தின் மேல் உறையில் "PIDPI" என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஊழல் இல்லாத உலகை உருவாக்க உங்களின் கடமை என்ன?
லஞ்சப் புகார்

ஒரு நாட்டின் ஜனநாயகம் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், அதற்கு வெளிப்படைத்தன்மையும் மக்களின் நம்பிக்கையும் மிக அவசியமாகும். ஊழல் இந்த இரண்டையுமே வேரோடு அழிக்கிறது.

தகுதியானவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் சலுகைகளும், பண பலம் மற்றும் அதிகார பலம் உள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடைகிறது. இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகும் நிலை ஏற்படுகிறது.

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதால், தரமற்ற உள்கட்டமைப்புகள் (சாலைகள், பாலங்கள் போன்றவை) உருவாகின்றன. இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கிறது.

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவம் சிதைந்து, பணம் உள்ளவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலை உருவாகிறது.

இதையும் படியுங்கள்:
ஊழல் புகார் வந்தால் பதவி அவுட்..! அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!
லஞ்சப் புகார்

ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வும், கடுமையான சட்டங்களும், தனிமனித ஒழுக்கமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்றியமையாததாகும்.