93.70% தேர்ச்சி: CBSE 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் டாப் இடத்தைப் பிடித்த நகரங்கள் எவை? சென்னைக்கு எந்த இடம்?

2026ம் ஆண்டுக்கான CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி சதவீதத்தில் சென்னைக்கு எத்தனையாவது இடம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
CBSE Class 10 result 2026
CBSE Class 10 result 2026
Published on

நாடு முழுவதும் CBSE 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த பிப்ரவரி 17-ம்தேதி தொடங்கி மார்ச் 11-ம்தேதி வரை நடைபெற்றன. சுமார் 33 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதியிருந்தனர்.

இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ம் ஆண்டிற்கான 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளுடன் சேர்த்து, மண்டலம் வாரியான தேர்ச்சி விகித விவரங்களையும் வாரியம் பகிர்ந்துள்ளது.

இந்த ஆண்டில், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.70% ஆகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் 93.66% என்ற விகிதத்தை விடச் சற்று அதிகமாகும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், 2026-ம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் 0.04 சதவீதப் புள்ளிகள் உயர்ந்துள்ளது.

வழக்கம்போலவே, இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பெற்று முன்னிலை வகிக்கின்றனர். மாணவிகள் 94.99% தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 92.60% தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
CBSE 10, 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எப்போது? முழு அட்டவணை இதோ..!
CBSE Class 10 result 2026

மாணவர்கள் தங்கள் CBSE 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் (2026) குறித்த விவரங்களை, cbse.gov.in மற்றும் results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகவும், அத்துடன் UMANG செயலி மற்றும் DigiLocker ஆகியவற்றின் வாயிலாகவும், தங்கள் உள்நுழைவு விவரங்களைப் (login credentials) பயன்படுத்தி அறிந்துகொள்ளலாம்.

பல்வேறு பள்ளி வகைகளின் அடிப்படையில் பார்க்கையில், கேந்திரிய வித்யாலயாக்கள் (KVs) 99.57% தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தில் திகழ்கின்றன; இவற்றுக்கு அடுத்தபடியாக, ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் (JNVs) 99.42% தேர்ச்சி விகிதத்துடன் நெருக்கமாகப் பின்தொடர்கின்றன. அரசுப் பள்ளிகள் 91.43% தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன; அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.01% தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன; அதேவேளையில், தனியார் பள்ளிகள் 93.77% தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.

2026ம் ஆண்டுக்கான CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி சதவீதத்தில் எந்த நகரம் முதலிடம் பெற்றது என்பதையும் சென்னைக்கு எத்தனையாவது இடம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

CBSE தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.70 ஆகும். திருவனந்தபுரம், விஜயவாடா ஆகிய இரு நகரங்களும் தலா 99.79% தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளன.

அது போல் சென்னை முதல் இரு மாநிலங்களுக்கு மிக நெருக்கமாக 99.58 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு 98.91 சதவீதத்துடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

அதேவேளையில், டெல்லி மேற்கு பகுதியில் 97.45 சதவீத தேர்ச்சியும் கிழக்கு பகுதி 97.33 சதவீத தேர்ச்சியும் பதிவு செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மாணவர்கள் ஷாக்..! CBSE பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் கட்டாயமாகிறது!
CBSE Class 10 result 2026

மறுபுறம், அனைத்து மண்டலங்களிலும் மிகக் குறைந்த தேர்ச்சி விகிதத்தை கவுகாத்தி மண்டலம் பதிவு செய்துள்ளது; இதன் தேர்ச்சி விகிதம் 85.32% ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com