நாளை முதல் ரேஷன் கார்டுகள் முடக்கம்! 1.58 கோடி பேருக்கு மத்திய அரசு செக்!

6 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 1) முதல் முடக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ரேஷன் கார்டு
ரேஷன் கார்டுAI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

6 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 1) முதல் முடக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதனால் நாடு முழுவதும் 1 கோடியே 58 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டு மூலமாக உணவு தானியங்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.

தமிழகத்தில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் கூட்டுறவுத் துறையின் நியாயவிலைக்கடைகள் வாயிலாக இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் உணவு பொருட்களை வாங்குவதற்கான ஆவணங்களாக மட்டுமில்லாமல், அரசின் உதவிகளை பெற அடையாள அட்டையாக உள்ளது.

அந்த வகையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவச மற்றும் மானிய விலையிலான அரிசி, பாமாயில், பருப்பு வகைகள் மட்டுமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு, பேரிடர் நிவாரண உதவிகள் மற்றும் அரசு வழங்கும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு தான் பிரதான சான்றாக விளங்குகிறது. குறிப்பாக தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஸ்மார்ட் ரேஷன் கார்டு மிக அத்தியாவசியமான ஆவணமாகும்.

இந்த திட்டத்தில் தகுதியானவர்களுக்கு தொடர்ந்து பயன் கிடைப்பதை உறுதி செய்ய ரேஷன் கார்டுகள் மற்றம் பயனாளிகளின் விவரங்கள் அவ்வப்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருக்கிற குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டுமென கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது.

அதேசமயம், ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 28 லட்சத்து 12,942 குடும்ப அட்டைதாரர்களும், 35,000 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

அதேசமயம் நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி ஏழை எளிய மக்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

ரேஷன் கடை
Ration shop|ரேஷன் கடை

இந்நிலையில் தான் மத்திய அரசு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் நாளை (அக்டோபர் 1) முதல் தற்காலிகமாக முடக்கப்படும் என அறிவித்துள்ளது.

அதேசமயம் அந்த பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக முடக்கப்பட்டாலும் அவர்களின் பெயர்கள் உடனடியாக தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்படாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

அதாவது சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டு பயனாளி (ரேஷன் கார்டு முடக்கப்பட்ட பயனாளி) தனது தகுதியை உறுதி செய்ய 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் இந்த காலத்திற்குள் அவர்கள் இ-கேஒய்சி (e-KYC) நடைமுறையை முடிக்க வேண்டும் கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.! இனி ரேஷன் பொருள் வாங்க கார்டு தேவையில்லை- அமைச்சர் வெங்கடரமணன்
ரேஷன் கார்டு

அவ்வாறு இ-கேஒய்சி முடித்த பின்னர் பயனாளிகளின் இடங்களில் கள ஆய்வு நடத்தி, தகுதி உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் அவர்களுக்கு தொடர்ந்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் உண்மையான பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் சென்றடைவதுடன், முறைகேடுகளையும் குறைக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மற்றொருபுறம் ஒவ்வொரு மாநிலங்களிலும் ரேஷன் கார்டுகளை கணினிமயமாக்குதல், ஆதார் இணைப்பு, இ-கேஒய்சி உள்ளிட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தரவு தூய்மையாக்கல் நடவடிக்கைகள் மூலம் சுமார் 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஜூலை மாத நிலவரப்படி 90.64% ரேஷன் கார்டுகளுக்கு இ-கேஒய்சி (e-KYC) பணிகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய உணவுத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பின்படி, நாடு முழுவதும் நாளை (அக்டோபர் 1) 1.58 கோடி ரேஷன் பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக முடக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கார்டுகள் முடக்கப்படும் என்ற விவரங்களை மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை...அரசின் முக்கிய அறிவிப்பு..!!
ரேஷன் கார்டு

அதேபோல் கர்நாடகாவில் ரேஷன் கார்டு பயனர்கள் இ-கேஒய்சி (e-KYC) முடிக்க இன்று தான் கடைசி நாள் (செப்டம்பர் 30) என்றும் புதுப்பிக்காதவர்களுக்கு நாளை முதல் உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com