#BREAKING லஞ்சத்தை ஒழிக்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?: முதலமைச்சர் விஜய்..!!

மதுராந்தகம் பரப்புரையில் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வர் விஜய்|தவெக
முதல்வர் விஜய்|தவெகimage credit-@Polimer News
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அடுத்து, அவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்துப் பேசிய முதலமைச்சர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய விஜய், மதுராந்தகம் தொகுதிக்கு நான் முதலமைச்சராக வரவில்லை, இடைத்தேர்தலுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். உங்கள் வீட்டு பிள்ளையாக, ஒரு அண்ணணாக, தம்பியாக, மகனாக வந்திருக்கிறேன்.

ஊழலே செய்ய மாட்டோம் என்று திமுகவினால் சொல்ல முடியுமா? என்று சவால் விட்டார். ஊழல், லஞ்சத்தை ஒழிக்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? என கேள்வி எழுப்பினார்.

தவெகவின் கேள்வி எப்போதும் ஸ்டாலினுக்குதான், நாங்கள் கட்டிய பாலத்தின் மீது ஏறி விஜய் சூட்டிங் எடுக்கிறார் என்றார். நாங்கள் கட்டிய பாலம் என்றால் முக ஸ்டாலின் தனது பணத்தில் கட்டினாரா?.. ஒஹோ கார் கூட இல்லாத, பத்தாயிரத்தை வைத்து, கணக்கில் வராத பணத்தை வைத்து பாலம் கட்டினீர்களா என்று முக ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் ஆபாச நதி ஓடிக்கொண்டிருக்கிறது. என் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியவில்லை என்ற கடுப்பில், விரக்தியில் திமுகவினர் ஒரு அபாயகரமான ஆயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். எனது சொந்தத் தாயை, என்னை பெற்ற தாயை, எனது அம்மாவை அவர்கள் தப்பாக பேசும்போது கூட நான் பொறுத்துக் கொண்டேன்.

ஆனால், தமிழ்நாட்டில் இருக்கிற என்னுடைய அம்மா, அக்கா., தங்கைகள், எனக்கு துணையாக இருக்கிற தாய் அன்பு காட்டுகிற தமிழ்நாட்டுப் பெண்களை முக ஸ்டாலின் மட்டும் அல்ல திமுகவின் தலைமை மற்றும் கீழே உள்ளவர்களும் அசிங்கமாக பேசுகிறார்கள்.

முதலமைச்சர் விஜய், மரகதம் குமரவேல்
முதலமைச்சர் விஜய், மரகதம் குமரவேல்image credit-@kundrathurBala

பெண்களை அசிங்கமாக பேசுவதை முக ஸ்டாலின் ரசித்துகொண்டிருக்கிறார். பெண்களை அவதூறாக, ஆபாசமாக பேசும் ஒவ்வொருக்கும் மிகப்பெரிய தண்டனையை தர வேண்டும்.

பரந்துர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்ததால் திமுகவினருக்கு தூக்கம் தொலைந்து விட்டது.

ஊழல் என்றவுடன் ஆதாரத்தை கேட்கிறது திமுக, ஆதாரம் தந்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்க சொல்கிறார்கள்.

பாஜக- திமுக வேறு வேறு இல்லை. டெல்லியில் உள்ள திமுக தான் பாஜக, தமிழ்நாட்டில் உள்ள பாஜக தான் திமுக. எப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகின்றனர்.

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திமுக முயற்சிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ‘காமராஜர் காலை உணவு திட்டம்’ விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்..!!
முதல்வர் விஜய்|தவெக

திமுக, அதிமுக, பாஜக மற்றும் பலர் என எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

கடன் வாங்குகிறேன், மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன், கொள்ளையடிப்பதற்காக அல்ல. நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, என்னால் எதை செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் அன்போடு அமைத்து கொடுத்தது தவெக ஆட்சி. தமிழ்நாட்டு மக்களை இனி திமுகவால் ஏமாற்ற முடியாது, ஏமாற்றவும் விடமாட்டோம்.

ஜெயலலிதாவை தவறாக பேசிய திமுகவுடன் அதிமுக கூட்டு சேர்ந்தபோதே அவர்களின் முகமூடி கிழிந்துவிட்டது.

எம்ஜிஆருக்கு திமுக தான் எதிரி, ஜெயலலிதாவுக்கும் திமுக தான் எதிரி, எனக்கும் திமுக தான் எதிரி என்றார்.

எம்ஜிஆர் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம், நான் உங்களிடம் இருக்கிறேன்.

வீரமணி தொடர்பான வழக்கை ஏன் மூடியது திமுக?, தமிழ்நாட்டில் பச்ச குழந்தைகளை பல வருடங்களாக ஒருவன் சீரழித்து கொண்டிருந்தான். சிறுமிகளை சீரழித்த ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு திமுக ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டது.

இதில் கூடவா கூட்டாக இருப்பீர்கள் என்று ஜெய் பீம் வீரமணி வழக்கு குறித்த முதல்வர் விஜய் கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தொடர் மின்வெட்டு: அதிகாரிகளுக்கு ஷாக்.!! திடீர் ஆய்வில் CM விஜய்.!
முதல்வர் விஜய்|தவெக

வரலாறு எடுத்து படித்தால் திமுகவின் வண்டவாளம், தண்டவாளம் தெரியப்போகிறது என்று முதல்வர் விஜய் கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com