JUST IN: பொய் சொல்வதில் முதலமைச்சர் விஜய்க்கு நோபல் பரிசு கொடுக்கலாம்: இபிஎஸ்..!!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத்துக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத்துக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, குதிரைபேரம் மூலம் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களால் இடைத்தேர்தல் வந்துள்ளது. பெட்டி மாற்றத்தால் வந்த தேர்தல் இந்த இடைத்தேர்தல் என்று கூறினார்.

கட்சி மாறி பெட்டி வாங்கி நம்மை எதிர்த்து நிற்கும் மரகதம் குமரவேலுக்கு தக்க தண்டனை தரவேண்டும். வாக்களித்த மக்களை மதிக்காமல் கட்சி மாறி போட்டியிடும் வேட்பாளரை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், தூய்மையானவரை வைத்து கொண்டு மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் வீரவசனம் பேசினார்.

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தங்கள் கட்சியில் தவெக சேர்த்தது ஜனநாயக படுகொலை. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை வித்தியாசமான தேர்தலாக இந்தியாவே பார்க்கிறது.

இடைத்தேர்தல் மூலம் முதலமைச்சர் விஜய்க்கு மதுராந்தகம் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

மேலும் ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

ஜெம் வீரமணி வழக்கில் திமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்ததோடு விட்டு விட்டார்கள். ஜெம் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் விசாரிக்கவில்லை, தவெக ஆட்சியிலும் முறையாக விசாரிக்கவில்லை என்றார்.

ஜெய் வீரமணி வழக்கில் அரசு துணை போவதை கண்ட நீதிபதி அவரை கைது செய்ய உத்தரவிட்டார். நீதிபதி கண்டித்த பிறகே ஜெம் வீரமணியை காவல்துறையினர் கைது செய்தனர். இரண்டரை மாதமாக ஜெய் வீரமணியை கைது செய்யாமல் தவெக அரசு காலம் தாழ்த்தி காப்பாற்றியது.

ஜெம் வீரமணியை தாம் தான் கைது செய்ய உத்தரவிட்டதாக முதலமைச்சர் விஜய் பச்சையாக பொய் சொல்கிறார்.

ஜெம் வீரமணி நடத்திய விழாவில் 2 தவெக அமைச்சர்கள் பங்கேற்றனர். ஜெம் வீரமணி தனது குடும்ப நண்பர் என தவெக அமைச்சர் ஒருவர் கூறியதாக கூறினார்.

சிறுமிகளை சீரழித்தவர்களுக்கு முதலமைச்சர் விஜய் என்ன தண்டனை பெற்றுத் தரப்போகிறார்.

பயிர்க்கடன் தள்ளுபடியில் தவெக அரசு இரட்டை வேடம் போட்டுள்ளது. பொதுத்தேர்தலில் விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளை பெற்றது தவெக.

தவெக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. மின் கணக்கீட்டில் குளறுபடி என்று சொன்னால் அடுத்த மாத கட்டணத்தில் கழித்து கொள்ளலாம் என்கிறார்.

இதையும் படியுங்கள்:
எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர் - அடித்து சொல்லும் தம்பிதுரை..!
எடப்பாடி பழனிசாமி

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற பட்டமளிப்ப விழாவிலேயே மின்வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டுக்கு மின் பற்றாக்குறை என்ற புது வார்த்தையை அமைச்சர் நிர்மல்குமார் கண்டுபிடித்துள்ளார்.

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை நான் பேசியபோது அவையில் முதலமைச்சர் இல்லை. சர்க்காரியா கமிஷன் பற்ற தேவையின்றி பேசி சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்பட்டது. தப்பி தவறி ஏதோ விபத்தில் ஆட்சிக்கு வந்தவிட்டது தவெக.

தவெக அரசுக்கு எல்லாமே ரீல்ஸ்தான், சட்டமன்றமே சினிமா போன்று ஆகிவிட்டது. சட்டமன்றம் பட்டிமன்றமாக மாறிவிட்டது, அவையில் 7 மணிநேரம் வெட்டி பேச்சுதான் நடந்தது. மக்கள் பிரச்சனைகள் பற்றி கேள்வி எழுப்பினால் முதலமைச்சரிடம் பதில் வராது, எழுந்து சென்று விடுவார்.

அரசு கடன் வாங்கினால் அது மக்கள் தலையில்தான் சுமையாக வந்து விழும். பொய் சொல்வதில் முதலமைச்சர் விஜய்க்கு நோபல் பரிசே கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
5 ஆண்டுகள் இந்த ஆட்சி நீடிக்காது: தவெக அரசை கடுமையாக விளாசிய எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி

இந்தியாவில் எங்குமே இல்லாத மோசமான அரசாங்கம் தமிழ்நாட்டில் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

logo
Kalki Online
kalkionline.com