மதுரையில் விஜய்யுடன் திரிஷா.. தொண்டர்களின் அட்ராசிட்டியால் செம கடுப்பில் ரசிகர்கள்!

இன்று மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை வரவேற்கும் வகையில், நகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
விஜய் திரிஷா போஸ்டர்
விஜய் திரிஷா போஸ்டர்image credit-@ians_india
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக இன்று மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை வரவேற்கும் வகையில், நகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் அப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில் ஒரு போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்று இருக்கிறது. முதலமைச்சர் விஜய்யை வரவேற்கும் விதமாக ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் அப்படி என்ன விசேஷசம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி இருக்கிறது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக மதுரைக்கு வருகிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார்.

பின்னர் அங்கிருந்து பிரத்யேக திறந்தவெளி வாகனத்தில் புறப்பட்ட முதலமைச்சர் ரோடு-ஷோ மூலம் பொதுமக்களை சந்தித்தார். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள், பெண்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையின் இருபுறமும் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

அதனைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்து, விழா மேடையில் 30 குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரங்களை வழங்கினார்.

முதல் கட்டமாக 1.28 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆண்டுக்கு 75.83 கோடி நிதி குழு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தான் மதுரை மாவட்டம் முழுவதும் திரிஷா ரசிகர் நலச் சங்கம் சார்பில் இந்தச் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நடிகை திரிஷா அரசியல் போஸ்டர்
நடிகை திரிஷா அரசியல் போஸ்டர்Source:twitter

அந்த போஸ்டர்களில், ஒரு பக்கம் குழந்தையை கையில் வைத்திருக்கும் விஜய்யின் போட்டோவும், மற்றொரு பக்கம் நடிகை திரிஷாவின் போட்டோவும் மற்றும் சங்கத்தின் (விஜய் திரிஷா) பிற உறுப்பினர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கிறது.

மேலும் அரசு கொண்டு வந்திருக்கும் இந்த தங்க மோதிரம் திட்டத்தை வரவேற்கும் விதமாகவும், முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் அந்த போஸ்டரில் இருக்கிறது.

குறிப்பாக திரிஷா நற்பணி மன்றம் சார்பில் விஜய்க்கு இப்படி ஒரு வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது தான் இப்போ இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

விஜய் மற்றும் திரிஷா இருவரின் ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். சமீப காலமாக முதலமைச்சர் விஜய், திரிஷாவின் நட்பு மற்றும் அவர்கள் குறித்த தனிப்பட்ட விவாதங்கள் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

அண்மைக் காலங்களில் சென்னை திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டது, விஜய்யின் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் த்ரிஷா பங்கேற்றது, மற்றும் அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற பந்தய நிகழ்வு ஒன்றில் இருவரும் இணைந்து காணப்பட்டது போன்ற நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகின.

விஜய் தற்போது ஒரு முக்கிய அரசியல் தலைவராகவும் முதலமைச்சராகவும் இருப்பதால், இத்தகைய தனிப்பட்ட வதந்திகள் அவரது அரசியல் பிம்பத்தைப் பாதிக்கலாம் என்று அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் மூத்த திரைத்துறையினர் சிலர் பொதுவெளியில் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் இணைந்த விஜய், திரிஷா… ட்ரெண்டிங்கில் The Goat படம்.. லீக்கான செய்திகள்!
விஜய் திரிஷா போஸ்டர்

இதுபோன்ற விவாதங்கள் மற்றும் கிசுகிசுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தாலும், விஜய் அல்லது திரிஷா ஆகிய இருவருமே இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாகவோ அல்லது பகிரங்கமாகவோ எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. இவர்களது தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வராத வரை, இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் உலா வரும் வெறும் ஊகங்கள் மற்றும் வதந்திகளாகவே பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் திரிஷா நற்பணி மன்றம் சார்பில் விஜய்க்கு இப்படி ஒரு வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது விஜய் ரசிகர்களை கடுப்பாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
திருப்பதியில் திரிஷா தரிசனம்.. நேராக விஜய் வீட்டிற்கு பயணம் - வைரல் வீடியோ..!
விஜய் திரிஷா போஸ்டர்

ஏற்கனவே விஜய் நிகழ்ச்சிகளில் திரிஷா கலந்து கொள்வது நெகட்டிவாக பேசப்பட்ட வரும் நிலையில் இது போன்ற போஸ்டர்கள் இப்போது தேவையா? என்று சில கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர், இது வேண்டும் என்றே விஜய்யை அசிங்கப்படுத்துவதற்காக திட்டமிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர் என்றும் கூறி வருகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com