முதல்வர் விஜய் வெற்றிக்கு ஆபத்தா.? பெரம்பூர் தேர்தல் வழக்கில் அதிரடி திருப்பம்.!

சொத்து விவர சர்ச்சை வழக்கில் காரசார வாதங்கள் நிறைவு; உயர்நீதிமன்ற தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பு!
முதல்வர் விஜய் - தேர்தல் வழக்கு
CM vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார் முதல்வர்.

இந்நிலையில் முதல்வர் விஜய் வெற்றி பெற்ற பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முதல்வரின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

அதோடு பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த போது முதல்வர் விஜய் சொத்து விவரங்களை முழுமையாக சமர்ப்பிக்கவில்லை என திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், சுயேட்சை வேட்பாளர்கள் தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்குகளை எதிர்த்து முதல்வர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்தி வைத்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன்.

இதையும் படியுங்கள்:
பைக் சாகசத்திற்கு ‘எண்ட் கார்டு’... ஒரே ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதும்; சென்னை போலீஸின் புதிய அஸ்திரம்!
முதல்வர் விஜய் - தேர்தல் வழக்கு

பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் முதல்வரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முதல்வர் தரப்பு வழக்குறைஞரின் வாதம் இன்று முன்வைக்கப்பட்டது.

பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் எவ்வித அடிப்படையும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சட்ட ஆணையப் பரிந்துரைகளின் படி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை நாளை மீண்டும் நடக்கவுள்ளது. மேலும் நாளையே இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது.

High court
உயர் நீதிமன்றம்
இதையும் படியுங்கள்:
149 உதவி எண் அறிவிப்பு..!! வெற்றிப் பயணம் திட்டத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
முதல்வர் விஜய் - தேர்தல் வழக்கு

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் முறையே பெரும்பான்மையான வெற்றியை தவெக பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தற்போது தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைமுறையில் உள்ளது. நாளை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், பெரம்பூர் தொகுதி தேர்தல் வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இடைத்தேர்தலில் தவெக-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்நிலையில் தேர்தல் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டால், அது முதல்வர் விஜய்க்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். ஏற்கனவே 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், விரைந்து தேர்தலை அறிவிக்க வேண்டும் என தவெக சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது

logo
Kalki Online
kalkionline.com