#BREAKING: இடைத்தேர்தல்: திமுகவுக்கு தேமுதிக ஆதரவு - பிரேமலதா அறிவிப்பு.!

திமுகவுக்கு ஆதரவு தரும் முடிவில் இடைத்தேர்தல் வியூகம்
இடைத்தேர்தல்
DMK - DMDK
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுகவுக்கு ஆதவளிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சற்றுமுன் தெரிவித்தார். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, இடைத்தேர்தலிலும் கூட்டணி சேர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
விநாயகர் சதுர்த்தியில் ஆஃபர்: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ...
இடைத்தேர்தல்

இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “தமிழக இடைத் தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக ஆதரவு அளிக்கும். ஏற்கனவே இது பற்றி அண்ணன் ஸ்டாலின் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் உரையாடினார். அப்போதே நான் இந்த இடைத்தேர்தல் மட்டுமல்ல, அடுத்து வர இருக்கும் இடைத்தேர்தலுக்கும் ஆதரவு கொடுப்போம் எனத் தெரிவித்தேன்.

திமுக வேட்பாளர்கள் என்னை நேரில் வந்து சந்தித்து ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தனர். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தேமுதிக, திமுகவிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவாக இருக்கும். திமுக வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். திமுக வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரச்சாரத்திலும் ஈடுபடுவேன்.

வருகின்ற செப்டம்பர் 16-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன” என அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
சட்டசபை முதல் கில்லி வரை: சென்னையில் வைரலாகும் முதல்வர் விஜய் விநாயகர் சிலைகள்!
இடைத்தேர்தல்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தேமுதிக மட்டுமே இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் தற்போது தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்து விட்டன. இதில் இடதுசாரிகள் மட்டும் தனித்துப் போட்டியிடுகின்றன.

இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்காமல் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு; தேர்தலுக்கு அல்ல என இடதுசாரிகள் மாற்று நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது தவெக-விற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது. நாளை இடதுசாரிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக இருக்கிறது.

மேலும் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதால் தமிழக இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது

logo
Kalki Online
kalkionline.com