விவசாயிகள், ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: 92,000 பேருக்கு விடிவுகாலம் தந்த முதல்வர் விஜய்!

கொடுத்த வாக்கை காப்பாற்றிய தமிழக அரசு: அமைதிப் போராட்ட வழக்குகள் வாபஸ் - அரசாணை வெளியீடு!
வழக்குகள் ரத்து
Farmers, Teachers
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகம், ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, தங்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அறிவித்தார். இந்நிலையில் இன்று (நவம்பர் 16) மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரையிலான காலகட்டத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க கடந்த ஆட்சிக் காலத்தில், மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற்று ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 02.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் கண்டறிப்பட்டன. அவற்றைத் திரும்ப பெற உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்து, இவ்வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட சுமார் 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வழக்குகளில் இருந்து விடுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசு
Tamilnadu Government
இதையும் படியுங்கள்:
சூப்பர் குட் நியூஸ்.! இன்றும் சரிந்தது தங்கம், வெள்ளி விலை.. நஷ்டம் யாருக்கு? லாபம் யாருக்கு?
வழக்குகள் ரத்து

ஜனநாயக உரிமைக்கு மரியாதை:

அமைதியான முறையில் தங்கள் உரிமைக்காக போராடுவதற்கும், குரல் கொடுப்பதற்கும் பொதுமக்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமையை மதிக்கும் வகையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்தது. வாழ்வாதார கோரிக்கைகள் மற்றும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டங்களின் போது விவசாயிகளும் மற்றும் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும் போராட்டம் செய்தனர்.

இந்தப் போராட்டத்தை கலைக்க முயற்சிக்கும் போது இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளால், அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும், சட்ட சுமைகளையும் போக்கும் விதமாக மனிதநேய அடிப்படையில் அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

ஏற்கனவே பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து விவசாயிகளுக்கு நிம்மதி அளித்த நிலையில், வழக்குகள் ரத்து செய்யப்பட்டது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
6 மணி நேரப் போராட்டம், 30 மருத்துவர்களின் கூட்டு முயற்சி: தாயின் கருவறையில் அதிசய அறுவை சிகிச்சை!
வழக்குகள் ரத்து

யாருக்கெல்லாம் பயன்:

தமிழக அரசின் உத்தரவின் மூலம், தமிழ்நாடு முழுவதும் சுமார் 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் சட்டச் சிக்கல்களில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படுகிறார்கள்.

தங்களின் உரிமைக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் அமைதியான முறையில் போராடியதால் காவல்துறை வழக்குகளை சந்தித்து வந்த விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் அரசாணையால் சட்ட சுமைகளில் இருந்து முழுமையான நிவாரணமும், நிம்மதியும் பெறுகின்றனர்