#BIG BREAKING: வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது!... வீட்டு உபயோக சிலிண்டர் விலை..!

கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வருகிறது.
LPG|எல்பிஜி விலை
LPG|எல்பிஜி விலைcredits to pintrest
Updated on

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எல்பிஜி (LPG), பிஎன்ஜி (PNG) மற்றும் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றம் மற்றும் தொடரும் முற்றுகை காரணமாக, வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையை அரசு உயர்த்த வாய்ப்புள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1-ம்தேதியன்றும் (இன்று) எல்பிஜி (LPG) மற்றும் பிஎன்ஜி (PNG) விலைகள் மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் 1-ம்தேதி HPCL, BPCL மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தங்களை செய்கின்றன. சில மாதங்களில் திருத்தம் ஏற்படாமலும் இருப்பதுண்டு. கடைசியாக ஜூலை 1-ஆம் தேதி விலை மாற்றம் செய்யப்பட்டது.

ஜூலை மாதத்தில் வணிகரீதியான (Commercial LPG Cylinder) எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. அந்த வகையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்து ரூ.3,106க்கு விற்கப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் ரூ.957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, இன்று ஆகஸ்ட் 1-ம்தேதி சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து, வணிக (19 கிலோ) மற்றும் வீட்டு உபயோக (14.2 கிலோ) சிலிண்டர்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கச்சா எண்ணெய் விலை உயர்வால், எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்வதற்கான சாத்தியக்கூறு அதிகமாகவே உள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் அதாவது கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை, 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 89 ரூபாயும், வணிக சிலிண்டர் விலை மொத்தம் 1546 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதாவது ஆறு மாதங்களில் வணிக சிலிண்டர் விலை 1580 ரூபாயில் இருந்து ரூ. ரூ.3,282 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையோன மோதல்களுக்கு பிறகு சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு, இந்தியாவில் சமையல் கேஸ் (LPG) தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு வழிவகுத்தது. போர் தொடங்கியது முதல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வந்தது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்தது. இதனால் பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டன். உணவுப்பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்ந்தது.

இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் போர் நிறுத்தம் காரணமாக மேற்காசிய நாடுகளில் பதற்றம் குறைந்ததால் வணிக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளையும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் நீக்கியது.

gas cylinder |எரிவாயு சிலிண்டர்
gas cylinder |எரிவாயு சிலிண்டர்

அதனை தொடர்ந்து கடந்த மாதம் (ஜூலை) வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கான விலை ரூ.172.50 வரை குறைக்கப்பட்டது. அதேசமயம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஜூலை 21-ம்தேதி, மத்திய கிழக்கில் மீண்டும் தொடங்கியுள்ள போரால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்த போர் சூழல் மற்றும் விநியோகத் தடை அச்சம் காரணமாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 87 முதல் 90 டாலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு ஹார்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களே முக்கியக் காரணமாகும்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம், எரிவாயு சிலிண்டர் விலையிலும் எதிரொலிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் எல்பிஜி (LPG), பிஎன்ஜி (PNG) மற்றும் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த கவலைகள் தீவிரமடைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
எல்பிஜி முதல் ரெயில்வே அபராதம் வரை: நாளை முதல் நம் பட்ஜெட்டை பதம் பார்க்க போகும் மாற்றங்கள்..!
LPG|எல்பிஜி விலை

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் வீட்டு உபயோக (14.2 கிலோ) எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.957.50 ஆகவும், வணிக பயன்பாட்டிற்கான (19 கிலோ) சிலிண்டரின் விலை ரூ.3,282 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தின் முதல் வாரத்திலும் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் விளைவாக, ஆகஸ்ட் மாதத்திலும் எரிவாயு சிலிண்டர் விலைகளில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வருகிறது.

அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு ரூ.3,283-லிருந்து ரூ.3,106 ஆகக் குறைந்தது. இந்நிலையில், தற்போது இந்த மாதம் (ஆகஸ்ட்) மீண்டும் ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை குறைப்பு உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் சிறு வணிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. எனினும், இதன் காரணமாக ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை குறையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! இனி 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் சிலிண்டர்..!
LPG|எல்பிஜி விலை

பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அது ரூ.957.50 என்ற பழைய விலையிலேயே நீடிக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com