குட் நியூஸ்..! சொந்த தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை லோன்..! – தமிழ்நாடு அரசின் மாஸ் அறிவிப்பு..!!

கறவை மாடு, ஆடு, கோழி வளர்ப்பு போன்ற தொழில்களைத் தொடங்கவும் அல்லது விரிவுபடுத்தவும் நீண்டகாலக் கடன் பெற வாய்ப்பு கிடைக்கிறது.
கூட்டுறவு கடன்
கூட்டுறவு கடன்AI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

சொந்தமாக விவசாயம் செய்யவும், கால்நடைகள் வளர்க்கவும், குளிர்பதனக் கிடங்கு அமைக்கவும் பணம் தேவைப்படுகிறதா? கூட்டுறவுத் துறை மூலம் தகுதியானவர்களுக்கு ரூ.30 லட்சம் வரை நீண்டகாலக் கடன் பெறுவதற்கு ஒரு சூப்பர் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை பெறுவதற்கு எங்கே விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...

கூட்டுறவு வங்கிகள் மூலம் நீண்ட காலக் கடன்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயம் (Crop Loan), நகை (Jewelry Loan), நீண்ட காலத் திட்டங்கள் (Long-Term Loans) மற்றும் தொழில் தேவைகளுக்காக பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் மதிப்பை உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி கடன் தொகை கிராமுக்கு ரூ.10,000 வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவு, புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் நீண்ட காலக் கடன்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்தும் வகையில், வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளா நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப் பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

மேலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.50 கோடி மதிப்பிலான நீண்ட காலக் கடன்களும் (Long Term Loans) இச்சிறப்பு முகாம்களில் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.

வாராந்திர சிறப்புக் கடன் முகாம்
Special Camp

வழங்கப்படும் கூட்டுறவு கடன் :

• வேளாண் இயந்திரம் வாங்குதல்

• குளிர்பதன கிடங்குகள் அமைத்தல்

• கால்நடை வளர்ப்பு (கறவை மாடு, ஆடு, கோழி)

• அறுவடைக்கு பிந்தைய உட்கட்டமைப்பு வசதிகள்

குறிப்பாக வாரந்தோறும் நடத்தப்படும் இந்த ஸ்பெஷல் முகாம்கள் மூலம் விவசாயிகள், வேளாண் இயந்திரங்கள் வாங்கவும், கறவை மாடு, ஆடு, கோழி வளர்ப்பு போன்ற தொழில்களைத் தொடங்கவும் அல்லது விரிவுபடுத்தவும் நீண்டகாலக் கடன் பெற வாய்ப்பு கிடைக்கிறது.

விவசாயிகள் மட்டுமின்றி தொழில் தொடங்க ஆசைப்படும் இளைஞர்களும் இந்த முகாம்கள் மூலம் தேவையான முதலீட்டைப் பெற்று, விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்க்கவும், அந்த தொழிலை விரிவுபடுத்தி, வருமானத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன்: கூட்டுறவு வங்கி அறிவிப்பு..!!
கூட்டுறவு கடன்

அதன்படி, தகுதியுடைய உறுப்பினருக்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் (PCARDB) மூலம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை நீண்ட காலக் கடன் வழங்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் (PCARDB) உரிய ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயனடையலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பத்துடன் புகைப்படங்கள்,

அடையாளச் சான்று,

முகவரிச் சான்று,

கேஒய்சி (KYC) ஆவணங்கள்

நில அடமான ஆவணங்கள்.

இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திப் பொருளாதார மேம்பாடு அடையக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கூட்டுறவு சங்க பயிர் கடன் வசூல் முற்றிலும் நிறுத்தம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
கூட்டுறவு கடன்

மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூட்டுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com