இனி கிராமுக்கு இவ்வளவு தான் கிடைக்கும்! நகைக்கடன் உச்சவரம்பை அதிரடியாக குறைத்த கூட்டுறவு வங்கி..!

தங்கம் விலை குறைவால் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் வரம்பு விவரங்கள் மற்றும் கடன் பெறுவோருக்கான வழிகாட்டுதல்.
gold loan |கூட்டுறவு வங்கி
gold loan |கூட்டுறவு வங்கி
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக்கடனுக்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நகைக்கடன் வாங்குபவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, நகர்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களும், கிராமப்புறங்களில் வசிக்கும் பலரும் இந்த சங்கங்கள் மூலம் நகைக்கடன் பெற்று வருகிறார்கள்..

கடந்த ஜனவரி மாதம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பழைய கடன் வரம்பில் பொதுமக்களுக்கு கிடைக்கும் தொகை குறைவாக இருந்தது. இதை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் கடன் தொகையை உயர்த்தியது. அதன்படி, கடந்த அக்டோபர் 5-ம்தேதி ஒரு கிராம் தங்கத்திற்கு நகைக்கடன் உச்சவரம்பு ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது.

அதேசமயம் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் கிடைக்கும் என்றாலும், எல்லாருக்குமே இந்த தொகை கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அடமானம் வைக்கும் நகையின் சந்தை மதிப்பும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்கப்படும். இதற்கு முன்பு இது கிராமுக்கு ரூ.7,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிராமுக்கு ரூ.10000 என்ற வரம்பும், நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என்ற வரம்பும் கணக்கிடப்பட்டு, இதில் எது குறைவான தொகையோ, அந்த தொகையே கடனாக (நகைக்கடன் வரம்பு) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நவம்பர் மாதம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

தங்கம் விலை
தங்கம் விலைAI Image

அதன்படி, நேற்று நவம்பர் 25-ம்தேதி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 குறைந்து, ரூ.91,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுவே நவம்பர் 1-ம்தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 12,730 ஆகவும், ஒரு சவரனுக்கு (8 கிராம்) ரூ. 1,01,840 ஆகவும் இருந்தது. கடந்த 25 நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹10,480 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை சரிவது நகை வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், அதிக விலை இருந்தபோது தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் நிலை தான் தற்போது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கடன் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்...கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.10,000 ஆக உயர்வு!
gold loan |கூட்டுறவு வங்கி

அடமானம் வைக்கப்பட்ட நகையின் தற்போதைய சந்தை மதிப்பு, வாங்கிய கடன் தொகையை விடக் குறையும்போது, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கூடுதல் பணம் செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பலாம்.

குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவைத் தொகையையோ கூடுதல் தொகையையோ கட்டத் தவறினால், நகைகளை ஏலம் விடும் நிலை கூட வரலாம்.

இதற்கிடையே தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடனுக்கான உச்சவரம்பு முன்பு கிராமுக்கு ரூ. 7,000 ஆக இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 5-ம்தேதி முதல் அந்த உச்சவரம்பு ரூ. 10,000 அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75% என மாற்றி அறிவித்திருந்தது.

இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைக்கடன் வரம்பு கிராமுக்கு ரூ.10,000ல் இருந்து ரூ.9,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் சந்தை மதிப்பு தற்போது ரூ.12,000க்கு கீழ் குறைந்துள்ளதால், அதன் 75% மதிப்பான ரூ.9,000 மட்டுமே கடனாகக் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
தங்கம் விலை 15% சரிந்தால் என்ன நடக்கும்? நகைக்கடன் வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!
gold loan |கூட்டுறவு வங்கி

இனி வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் குறையும் பட்சத்தில் நகைக்கடன் வரம்பும் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூட்டுறவுத் துறை அறிவித்ததுள்ளது.