காவலரை அடித்ததால் வேலை பறிபோனது; தவறை உணர்ந்து கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்ட இளைஞர் ஆகாஷ்!

தஞ்சாவூரில் காவலரை அறைந்ததால் வேலை இழந்ததாகக் கூறி வழக்கைத் திரும்பப் பெற இளைஞர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆகாஷ்
ஆகாஷ்image credit-tamil.oneindia.com, @ZeeTamilNews
Updated on

நான் காவலரை தாக்கியது எதிர்பாராமல் நடந்த சம்பவம். இதனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும், தன் மீதும் தனக்கு ஆதரவாக பேசியவர்கள் மீதும் போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும், தனக்கு வேலை வழங்க வேண்டும் காவலரை தாக்கிய இளைஞர் ஆகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17-ம்தேதி விசிகவினர் வைத்திருந்த பேனர்கள் அகற்றப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக அவசர வேலை காரணமாக பைக்கில் சென்ற 26 வயது இளைஞர் ஆகாஷ், தனக்கு வழிவிடுமாறு கேட்டு அங்கு இருந்த விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) அப்துல் ரகீம் என்பவர் இளைஞரிடம் சென்றுப் பேசியுள்ளார்.

அப்போது காவலர் இளைஞரின் கன்னத்தில் அடிக்க, இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ் சற்றும் தாமதிக்காமல் காவலர் அப்துல் ரகீம் கன்னத்தில் திருப்பி பளார் என்று அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. உடனே காவலர்கள் இணைந்து அந்த இளைஞரை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்று காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசிய அய்யப்பன் ஆகியோர் மீது காவல்துறையின 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ஒருநாள் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். பின்னர், அவரது வயது மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தது.

இதற்கிடைய இந்த சம்பவத்திற்கு இளைஞருக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் அனைவரும் ஆதரவு தெரிவித்து கருத்து கூறி வந்தனர்.

இந்நிலையில் இன்று பேட்டியளித்த இளைஞர் ஆகாஷ், காவலரை அறைந்ததால் தனது வேலை போய்விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

man attack police|ஆகாஷ் கோரிக்கை
man attack police|ஆகாஷ் கோரிக்கைimage credit-tamil.indianexpress.com

மேலும் இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததல்ல என்றும், கோபத்தில் நடந்த தவறுக்காக எஸ்எஸ்ஐ அப்துல்ரஹீமிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் ஒரு பிறந்தநாள் பேனரை அகற்றியதற்காக விசிகவினர் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் நாங்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

என்மீதான வழக்கையும், அய்யப்பன் மீதும் தொடரப்பட்ட வழக்கையும் போலீசார் ரத்து செய்ய வேண்டும். போலீசாரை அடித்ததால் தன்னை வேலையில் இருந்து நீக்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2020-ல் இருந்து ஜிம் கோச்சாக (Gym Coach) இருக்கிறேன். தற்போது குடும்பம் மற்றும் வருமான பிரச்சனை காரணமாக பகலிலும், இரவிலும் (Night Shift) வேலை செய்கிறேன்.

இதையும் படியுங்கள்:
சென்னையில் கொதித்தெழுந்த மாணவர்கள்! வீதியில் இறங்கி கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
ஆகாஷ்

ஒரு தனியார் நிறுவனத்தில் பேமெண்ட் சூப்பர்வைசராக இருக்கிறேன். போலீசார் எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. காவல் நிலையத்தில் என்னை நல்ல விதமாக தான் நடத்தினார்கள்.

மேலும் தான் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வேலை இல்லாமல் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும், எங்கேயும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள ஆகாஷ், குடும்பத்தை காப்பாற்ற தனக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
சென்னையில் பரபரப்பு..!!ஜிஎஸ்டி அதிகாரிகள் மிரட்டி லஞ்சம் கேட்பதாகக் கூறி வியாபாரிகள் போராட்டம்..!!
ஆகாஷ்

மாற்றம் வேண்டும் என்பதற்காக நானும் தவெகவிற்குதான் வாக்களித்தேன் என தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com