கூட்டுறவு வங்கிகளில் வாராந்திர கடன் முகாம்: எந்த நாளில் என்ன கடன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!

எளிய நடைமுறையில் உடனடி கடன் பெற செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்துங்கள்.
வாராந்திர சிறப்புக் கடன் முகாம்
Special Camp
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

கூட்டுறவுத் துறை மூலம் தமிழக மக்களுக்கு கடன் வசதிகளை எளிதாக்கும் வகையில் வாராந்திர சிறப்புக் கடன் முகாம்களை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை நிறுவனங்கள் வாயிலாக மொத்தம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுயதொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் என பலரும் இந்த சிறப்பு முகாம்களின் மூலம் பயனடைவார்கள். பொதுவாக தொழில் மற்றும் விவசாய கடன் பெறுவதற்கான நடைமுறை நீண்ட நாட்களுக்கு இழுக்கும். இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை குறைக்கவும், விரைந்து கடன் வழங்கவும் வாராந்திர சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACCS) வழியாக இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
நிதி நிர்வாகத்தில் சிறுவர்கள் - சிறந்து விளங்க 3 முக்கிய பண மொழிகள்
வாராந்திர சிறப்புக் கடன் முகாம்

சிறப்பு முகாம் விவரங்கள்:

1. செவ்வாய்க் கிழமை:

மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிருக்கான ‘சிங்கப் பெண்கள்’ கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான முகாம் செவ்வாய் கிழமையில் நடைபெறும்.

2. வெள்ளிக் கிழமை:

விவசாயம் மற்றும் சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைத் துறை கடன்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக் கிழமை நடைபெறும்.

தொடர்பு எண்:

கடன் பெறுவது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற 9884000845 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

1. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். ​

2. மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள்.

3. நகர கூட்டுறவு வங்கிகள்.

தேவையான ஆவணங்கள்:

1. ஆதார் அட்டை

2. குடும்ப அட்டை

3. வருமானச் சான்று

4. நில ஆவணங்கள்

5. வங்கி பாஸ்புக் நகல்

6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தொழில்துறை சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் கடன்களுக்கு ஒற்றை சாளர முறைப்படி ஒப்புதல் வழங்கப்படும் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடன் வசதியை மேலும் எளிமையாக்க வாராந்திர சிறப்பு முகாம்களை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. இந்த முகாம்களின் மூலம் எண்ணற்ற பெண்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

கடன் வசதி
Loan
இதையும் படியுங்கள்:
காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தங்கம் விலை திடீர் சரிவு.!
வாராந்திர சிறப்புக் கடன் முகாம்

விண்ணப்பிக்கும் வழிமுறை:

* முகாம் நடைபெறும் நாளில் தேவைப்படும் அசல் ஆவணங்கள் மற்றும் நகல்களுடன் உங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு துறை சங்கத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.

* கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். ​

* கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு, தகுதியின் அடிப்படையில் கடன் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கிகளில் தங்க நகை கடன்களுக்கான உச்சவரம்பை அதிகரித்தது தமிழக அரசு. இதன்படி ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் வழங்க அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வாரந்தோறும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்திருப்பது தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com