பள்ளிக்கு அனுப்பாதீர்கள்! குழந்தைகளுக்கு பரவும் காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல் இருந்தாலும் அலட்சியம் வேண்டாம்; அரசு தீவிர கண்காணிப்பு.
டெங்கு காய்ச்சல்
Dengue Fever
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், “தமிழ்நாட்டில் சுவாசத் தொற்று மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். நடப்பாண்டில் செப்டம்பர் 15-ம் தேதி வரை தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலால் 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால், குணமாகும் வரை அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்” என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2025-ம் ஆண்டில் 25,585 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நடப்பாண்டில் இன்னும் 3 மாதங்கள் மீதமிருப்பதால், டெங்கு பரவலைக் கட்டுக்குள் வைக்கு தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வாங்கும் மருந்து ஒரிஜினலா? இனி QR கோடை ஸ்கேன் செய்தால் போதும்..!!
டெங்கு காய்ச்சல்

அரசின் நடவடிக்கைகள்:

* தமிழ்நாடு முழுவதும் சுமார் 25,000-க்கும் மேல் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கொசுப் புழுக்களை கண்டறிந்து, அழிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு பரவல் குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது.

* 2026 ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 11,322 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 4.34 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த முகாம்களில் 3,401 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டது.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் பிரத்யேகமான டெங்கு வார்டுகள், போதிய அளவிலான மருந்துகள் மற்றும் ரத்த தட்டை அணுக்கள் பரிசோதனை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

 Dengue fever
Dengue fever
இதையும் படியுங்கள்:
உஷார்.!! உயிருக்கே ஆபத்தான 2 அழகு சாதனங்கள்: மத்திய அரசு திடீர் எச்சரிக்கை!
டெங்கு காய்ச்சல்

பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள்:

* இருமல், சளி மற்றும் சுவாசத் தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

* காய்ச்சல் ஏற்பட்டால் நேரடியாக மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

* டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகும். ஆகையால் வீட்டின் நீர்நிலைத் தொட்டிகள் மற்றும் தேவையற்ற இடங்களில் மழைநீர் தேங்கினால் உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும்.

* வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com