

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாராம் என்ற பேச்சு தான் கடந்த சில நாட்களாகவே அரசல் புரசலாக சமூகவலைத்தளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. தனுஷுக்கு தற்போது 43 வயது தான் ஆகிறது. தற்போதில் இருந்தே கவனம் செலுத்தினால் இன்னும் 5, 10 ஆண்டுகளில் அரசியலுக்கு வந்துவிடலாம். தமிழ்நாட்டு மக்கள் விஜயை எப்படி தங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்தார்களோ அதேபோல் தனுஷையும் தங்கள் வீட்டு பிள்ளையாக பலரும் பார்க்கிறார்கள். அந்த இமேஜ் அவருக்கு அரசியலில் பெரிதும் கை கொடுக்கும் என்றே பலரும் கணித்துள்ளனர். எங்கு எப்படி பேச வேண்டும் என்பது தனுஷுக்கு தெரியும். அதுவும் அவருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் என்று பேசப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட், நடிகர் தனுஷின் அரசியல் எதிர்காலம் (அரசியல் பிரவேசம்) குறித்தும் தனது சுவாரசியமான கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அரசியலில் களமிறங்கினால், அது தமிழக அரசியலின் பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக என்ற கட்சிகளே இருக்காது. தனுஷ் இரண்டாவது இடத்திற்கு வந்து விடுவார் என்று தனது அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார். எதிர்காலத்தில் தமிழக அரசியல் களம் என்பது இரு முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் தனுஷ் இடையேயான நேரடிப் போட்டியாக மாறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விஜய்யின் வருகை மற்றும் தனுஷின் அரசியல் நுழைவு ஆகியவை திராவிடக் கட்சிகளின் அடித்தளத்தை அசைக்கும் என்பதால், வரும் 2031-ம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்றார்.
நடிகர் தனுஷின் ஜாதகத்தை நேரடியாக ஆய்வு செய்துள்ளதாக கூறிய ஜோதிடர் ரிக்கி ராதன், அவரது ஜாதகத்தில் அரசியலில் மிகப்பெரிய உயரத்தை எட்டுவதற்கான உன்னதமான யோகம் மிக வலுவாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், தீவிர அரசியலில் இறங்குவது குறித்த இறுதி முடிவை எடுக்க வேண்டியது நடிகர் தனுஷின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் தான் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாகவும், பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அரசியல் பிரவேசத்திற்காக தன்னுடைய ரசிகர் மன்றத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் தனுஷ், விரைவில் அரசியல் அறிவிப்பை வெளியிட ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம் முதலமைச்சர் விஜய் போல் தனிக்கட்சித் தொடங்கி தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வரமுடியுமா? என்ற சந்தேகமும் தனுஷ்க்கு இருப்பதால், புதிய கட்சித் தொடங்குவதற்கு பதில் பாஜகவில் இணைந்து, தேர்தல் அரசியலை செய்யலமா? எனவும் அவர் தன்னுடைய நெருக்கமான வட்டாரத்தில் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், பாஜக தலைமையும் தனுஷ் தங்கள் கட்சியில் இணைவதை விரும்புவதாகவும் இது தொடர்பாக தனுஷ் தரப்பிடம் பாஜக தேசிய தலைமையில் இருந்து முக்கிய நபர் ஒருவர் பேசிவருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
பாஜகவை கொள்கை எதிரி என பிரகடனப்படுத்தி தமிழ்நாட்டில் விஜய் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தனுசை பாஜகவில் இணைத்து, விஜய்க்கு எதிராக களமிறக்க பாஜக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.ரிக்கி ராதன்
தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்து ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டின் கணிப்பின்படி, தற்போது திரைத்துறையில் பிஸியாக இருக்கும் நடிகர் தனுஷின் கவனம் பிற்காலத்தில் அரசியல் பக்கம் திரும்பலாம் என்றாலும், அவர் புதுக் கட்சியைத் தொடங்குவாரா அல்லது பாஜகவில் இணைவாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.