72வது தேசிய விருது: சிறந்த நடிகர் விருதை பெற்றார் தனுஷ்.!

குஜராத் ஏக்தா நகரில் நடைபெற்ற 72வது தேசிய விருது வழங்கும் விழா
தேசிய விருது
Actor Dhanush
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

இந்தியத் திரைத் துறையில் மிக உயரிய விருதாக தேசிய விருது பார்க்கப்படுகிறது. 72வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று (செப்டம்பர் 22) குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் நடைபெற்றது. இதுவரை தேசிய விருதுகள் அனைத்தும் தலைநகர் டெல்லியிலேயே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்திய தேசிய திரைப்பட விருதுகள் விழாவை நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில், இம்முறை டெல்லியைத் தாண்டி குஜராத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டது.

இதன்படி இன்று மதியம் 3 மணிக்குத் தொடங்கிய தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த படங்களைத் தேர்வு செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த ஜூலை 18-ம் தேதி தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிவையில் விருதுகள் அறிவிக்கப்பட்ட திரை நட்சத்திரங்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. கேப்டன் மில்லர் படத்தின் சிறந்த நடிப்புக்காக இந்த விருது தனுஷுக்கு வழங்கப்பட்டது.

கேப்டன் மில்லர் படத்திற்கு சிறந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதை அருண் மாதேஷ்வரன் மற்றும் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
தூத்துக்குடியில் பரபரப்பு..! த.வெ.க-வுக்கு அஜித் ஆதரவு என போஸ்டர்... கொதித்தெழுந்த அஜித் ரசிகர்கள்!
தேசிய விருது

விருது வழங்கும் விழாவில் நடிகர் தனுஷின் பெயரை அறிவித்ததும் அரங்கமே அதிர்ந்தது. ரசிகர்களின் கரகோஷத்தால் அரங்கமே சில நிமிடங்கள் அதிர்ந்து போனது. தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு தோல்விகளை சந்தித்த நடிகர் தனுஷ், இன்று நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், பாடகர் மற்றும் தயாரிப்பாளராக எனப் பன்முகத்தன்மை கொண்டவராக மிளிர்கிறார்.

இதற்கு முன்னதாக 2011-ம் ஆண்டில் ஆடுகளம் படத்திற்காக நடிகர் தனுஷ் தேசிய விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் திரைப்படத்திற்கும் தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
வந்தாச்சு புது ரூல்ஸ்..!! இனி டெம்பர் கிளாஸுக்கும் BIS சான்றிதழ் கட்டாயம்.!
தேசிய விருது

தமிழ் சினிமா பிரபலங்கள் வென்ற விருதுகளின் பட்டியல்:

* சிறந்த தமிழ்ப்படத்திற்கான விருது ராயன் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை படத்தின் தயாரிப்பாளர் காவேரி கலாநிதி மாறன் மற்றும் இயக்குநர் தனுஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

* சிறந்த சண்டை வடிவமைப்பிற்கான விருது மாகாராஜா திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை படத்தின் சண்டை ஒருங்கிணைப்பாளர் அனல் அரசு பெற்றுக் கொண்டார்.

* சிறந்த பின்னணி இசைக்கான விருது அமரன் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பிரபல இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார் பெற்றுக் கொண்டார்.

* அமரன் திரைப்படத்திற்கு சிறந்த எடிட்டிங் விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதை எடிட்டர் கலைவாணன் பெற்றுக் கொண்டார்.

* சிறந்த இயக்குனருக்கான விருது அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு வழங்கப்பட்டது.

* சிறந்த துணை நடிகைக்கான விருது மகாராஜா படத்தில் நடித்த சாச்சனாவுக்கு வழங்கப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com