மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் பேராபத்து.! அலட்சியம் காட்டினால் கண்களை இழக்க நேரிடும்!

தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பு 23% உயர்வு.!
நீரிழிவு நோய் பாதிப்பு
Diabetes
Updated on

இந்தியாவில் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் தவறான உணவுமுறை, மது மற்றும் போதைப் பழக்கமே முக்கிய காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணக்கை 5% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இப்போதே சரியான உணவுக் கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஏற்கனவே தமிழ்நாட்டில் நோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தத் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாறி வரும் நவீன உலகில் சீரான உணவுப் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல்நலன் பாதிக்கப்படுவதோடு, மன நலனும் பாதிக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுவோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பேக்கரிகள் அதிகரித்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. பொதுமக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு பேக்கரிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பேக்கரியில் விற்பனையாகும் இனிப்பு பண்டங்கள், நீரிழிவு நோய்க்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் National Eye Institute (NEI) நடத்திய ஆய்வில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

NEI வெளியிட்ட ஆய்வு முடிவில், “தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டில் 18% ஆக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2024-ல் 5% உயர்ந்து 23% ஆக இருக்கிறது. அதாவது தற்போதைய தமிழ்நாட்டு மக்கள் தொகையின் படி நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. வெறும் நான்கே ஆண்டுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை 5% வரை அதிகரித்திருப்பது, தமிழ்நாட்டில் மிகப் பெரிய பேராபத்து சூழ இருக்கிறது என்பதை முன்கூட்டியே உணர்த்துகிறது.

நீரிழிவு நோய் பாதிப்பால், கண்களிலும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக நீரிழிவு விழித்திரை நோய் போன்ற சிக்கல்களும் மனிதர்களுக்கு அதிகரித்து வருகிறது” என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Diabetes
Diabetes
இதையும் படியுங்கள்:
முதல்வரை தடுக்கும் திமுக.. அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு.!
நீரிழிவு நோய் பாதிப்பு

நீரிழிவு நோயானது மனித உடலின் மற்ற உறுப்புகளை எப்படி பாதிக்கிறது என்பதைக் கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே NEI மேற்கொண்ட இந்த ஆய்வின் முக்கிய நோக்கம்.

ஆரம்ப கட்டத்திலேயே நீரிழிவு நோய் பாதிப்புக் கண்டறிந்து விட்டால், முறையான மருத்துவம் மற்றும் சீரான உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் கண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.

ஆகையால் பொதுமக்கள் சீரான இடைவெளியில் அவ்வப்போது நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனையை செய்து கொள்வது அவசியம்.

ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரையால், விழித்திரையில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் சேதமடைகின்றன. இது தொடர்ந்தால் காலப்போக்கில் மெல்ல மெல்ல பார்வை மங்கி, நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

NEI ஆய்வின்படி, நீரிழிவு நோயால் பதாக்கப்பட்ட பலருக்கும் கண்கள் பாதிக்கப்படுவது ஆரம்பத்தில் தெரிவதில்லை. அறிகுறிகள் தெரியும் போது அதன் பாதிப்புகள் தீவிரமாகி விடுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க, சரியான உணவுப் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
செம சான்ஸ்.. 2 நாளில் ரூ.2,400 சரிவு..! தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்.!
நீரிழிவு நோய் பாதிப்பு
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
logo
Kalki Online
kalkionline.com