செம சான்ஸ்.. 2 நாளில் ரூ.2,400 சரிவு..! தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்.!

தங்கம் விலை
Gold Price Updates
Updated on

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில் திடீர் உயர்வை சந்தித்த நிலையில் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் நேற்று தங்கம் மற்றும் வெள்ளி விலை கடுமையான சரிவை சந்தித்தது.

கடந்த வாரத்தில் மட்டும் ரூ.6,000-க்கும் மேல் உயர்ந்த விலையில் நேற்று விலை சரிந்ததால், நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தங்கத்தில் தொடர் முதலீடு செய்வது நல்ல லாபத்தைக் கொடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நேற்று (ஜூலை 06) தங்கம் ஒரு சவரன் ரூ.1,120 சரிந்தது. அதேபோல் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.10,000 குறைந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,08,480-க்கும், ஒரு கிராம் ரூ.13,560-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,50,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 07) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1280 குறைந்து, ரூ.1,07,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.13,400-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே நாள் ஜூலை 7-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,080-க்கும், 1 கிராம் ரூ.9,010-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், ஓராண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்துள்ளது.

2025 ஜூலை 7-ல் 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓராண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் ஊக்குவித்து வருகின்றனர்

தங்கம் விலை
Gold Price Updates
இதையும் படியுங்கள்:
ஆதார் பயனர்களுக்கு குட் நியூஸ்: இனி 6 மாதத்திற்கு கட்டணமே கிடையாது!
தங்கம் விலை

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 06: 1 கிராம் - ரூ.13,560 1 சவரன் ரூ.1,08,480

ஜூலை 05: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600

ஜூலை 04: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600

ஜூலை 03: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600

ஜூலை 02: 1 கிராம் - ரூ.13,550 1 சவரன் ரூ.1,08,400

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 06: 1 கிராம் - ரூ.250

ஜூலை 05: 1 கிராம் - ரூ.260

ஜூலை 04: 1 கிராம் - ரூ.260

ஜூலை 03: 1 கிராம் - ரூ.260

ஜூலை 02: 1 கிராம் - ரூ.255

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது உச்சத்தில் இருப்பதால், சாமானிய மக்கள் நகை வாங்குவதைக் குறைத்துள்ளனர். இருப்பினும் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைக் காட்டிலும், தங்கத்தில் நல்ல லாபம் கிடைப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
​வெள்ளித்திரையில் முதல்வர்: அடுத்த 15 நாட்களில் நடக்கப்போகும் பிரம்மாண்டம்!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com