பெண்கள் குழந்தைகளை தாக்கும் டிங்கா டிங்கா வைரஸ்… 30 பேர் பலி!

virus
virus
Published on

உகாண்டாவில் டிங்கா டிங்கா என்ற புதிய வைரஸ் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் தாக்குகிறது. இதுவரை இந்த வைரஸால் மொத்தம் 30 பேர் பலியாகியுள்ளனர்.

உலக நாடுகள் மத்தியில் புதிய புதிய வைரஸ்கள் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் உயிரைக் கொல்லும் வைரஸ்கள் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது ஒரு புதிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

ஆப்பிரிக்கா மக்களால் டிங்கா டிங்கா என்றழைக்கப்படும் புதுவகையான வைரஸ் ஆப்பிரிக்காவில் பரவி வருகிறது. குறிப்பாக பூண்டிபுக்யோ மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் இந்த டிங்கா டிங்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐஏஎன்எஸ் அறிக்கைகளின்படி, பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைக்கும் இந்த நோய், அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான உடல் நடுக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி இந்தப் பொருட்களை எல்லாம் விமானத்தில் எடுத்துச் செல்லவே முடியாது! 
virus

நிற்க கூட முடியாத அளவிற்கு உடலில் கடுமையான நடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டிபயாட்டிக்குகள் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் நோயால் சுமார் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளளனர் என்றும்,  30 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களில் பொதுவாகக் காணப்படும் அறிகுறிகளையும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவை விட்டு வெளியேறுகிறார் விராட் கோலி!
virus

அதன்படி, காய்ச்சல் தலைவலி இருமல், மூக்கு ஒழுகுதல், உடல் வலிகள் ஆகியவை இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. உலகை பெரிதளவில் அச்சுறுத்திய கோவிட் 19, மலேரியா, தட்டம்மை போன்ற சுவாச நோய்க்கிருமிகள் இந்த நோய்க்கு காரணமா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், சில ஆராய்ச்சியாளர்கள் இந்த நோய் தொற்றுக்கும் 1518ல் பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஏற்பட்ட "டான்சிங் பிளேக்" என்ற நோய்க்கும் இடையே ஒத்து போவதாக தெரிவித்துள்ளனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com