2026 தீபாவளி: பட்டாசு வெடிக்கும் டைமிங் இதுவா? பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்!

சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாட வழிகாட்டுதல்கள்.
பட்டாசு வெடிக்கும் நேரம்
Diwali 2026
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளியை அனைவரும் சொந்த ஊரில் குடும்பத்தாருடன் கொண்டாடும் வகையில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி என்றாலே பட்டாசுக்குத் தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்போம். தீபாவளியில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது பாரம்பரிய பழக்கம். காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழலைக் காக்கும் பொருட்டு பட்டாசுகளை வெடிப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்தது உச்சநீதிமன்றம். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த கால நிர்ணயம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்புடி காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம். இந்த 2 மணி நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தவர்கள் மீது கடந்த காலத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டன. நடப்பாண்டிலும் பட்டாசு வெடிக்க இதே நேரம் தான் கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்து மகிழ்வதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொதுமக்களுக்கு உண்டு.

தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகள் கள்ள சந்தையில் விற்கப்படுவதால், சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளின் விற்பனை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆன்லைனில் தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை என்பதை நம்பி பொதுமக்கள் பலரும் மோசடி வலையில் சிக்கி பணத்தை இழக்கின்றனர். ஆகையால் ஆன்லைனில் வாங்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை கிட்டத்தட்ட 25 முதல் 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் நிதி நெருக்கடியில் இருக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு பட்டாசு விலை உயர்வும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

பொதுவான விதிமுறைகள்:

* சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க அங்கீகரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும், வெடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு வாங்கும் போது அதில் QR குறியீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

* வேதிப் பொருட்கள் கலந்த பட்டாசுகள் மற்றும் அதிகளவில் சத்தம் மற்றும் புகையை எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* பள்ளிகள், முதியோர் இல்லங்கள், வழிபாட்டுத் தலங்கள் மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்கள் மற்றும் பெட்ரோல் பங்க்குகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

* திறந்தவெளி அல்லது குடியிருப்போர் சங்கங்கள் ஒதுக்கியுள்ள பொது இடங்களில் பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அவசர உதவி எண்கள்:

பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவசர உதவிக்கு கீழ்க்கண்ட எண்களை அழைக்கவும். ​

தீயணைப்பு & மீட்புப்பணி - 101 ​

மருத்துவ அவசர ஊர்தி - 108 ​

பொது அவசர உதவி - 112

இதையும் படியுங்கள்:
வெறும் ரிவ்யூ எழுதி பல லட்சங்களை இழந்த அவலம் - ஆன்லைனில் பணத்தை இழக்காமல் தப்பிப்பது எப்படி?
பட்டாசு வெடிக்கும் நேரம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

* பட்டாசுகளை வெடிக்கும் நேரத்தில் தவிர்க்க முடியாமல் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், N95 மாஸ்க் அணிவது பட்டாசு கழிகளில் இருந்து வெளியேறும் நுண்துகள்கள் நுரையீரலுக்குள் செல்வதைத் தடுக்கப்படும்.

* தீபாவளி நாளிலும், அதற்கு அடுத்த நாளிலும் அதிகாலைப் பனிமூட்டத்துடன் பட்டாசு புகையும் கலந்து விடுவதால், ‘ஸ்மாக்’ உருவாகும். இந்த 2 நாட்களில் மட்டும் காலை நடைபயிற்சி மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது.

சுற்றுச்சூழல் மாசுபட்டால், அது மனித குலத்திற்கு கேடு விளைவிக்கும். ஆகையால் தான் பட்டாசு வெடிக்கும் நேரம் குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, அரசால் நிர்ணயிக்கப்படும் 2 மணி நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

இதையும் படியுங்கள்:
தீபாவளியில் உயிர் காக்கும் பாலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை..! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்..!
பட்டாசு வெடிக்கும் நேரம்
logo
Kalki Online
kalkionline.com