தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை டிக்கெட் புக்கிங்.!

சென்னை - கன்னியாகுமரி, தென்காசி வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம்; முழு நேர விவரங்கள் இதோ!
Special train
Train
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து பலரும் இந்த வார இறுதியில் சொந்த ஊருக்கு செல்லவுள்ளனர். தீபாவளிக்கு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லவுள்ள பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது ரயில்வே நிர்வாகம்.

சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாகவும் நவம்பர் 5-ம் தேதியன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், நவம்பர் 7-ம் தேதி சென்னையில் இருந்து தென்காசிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாக நவம்பர் 9-ம் தேதி கன்னியாகுமாரி மற்றும் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்:
புயலில் சிக்கிய தங்கம்.! கண்ணிமைக்கும் நேரத்தில் எகிறியது ரேட்.!!
Special train

சிறப்பு ரயில்களின் விவரங்கள்:

* நவம்பர் 5: சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுரிக்கு செல்லும் சிறப்பு ரயில் இரவு 11:50 மணிக்கு புறப்பட உள்ளது.

* நவம்பர் 7: தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு செல்லும் சிறப்பு ரயில் காலை 5:00 மணிக்கு புறப்பட உள்ளது.

* நவம்பர் 9: கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் சிறப்பு ரயில் இரவு 11:20 மணிக்கு புறப்பட உள்ளது.

* நவம்பர் 9: செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் சிறப்பு ரயில் மதியம் 3:00 மணிக்கு புறப்பட உள்ளது.

முன்பதிவு:

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் நாளை (நவம்பர் 3) தொடங்குகிறது.

சிறப்பு ரயில்களின் மூலம் தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்லவும், பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பவும் இருவழிக்கான பயணச்சீட்டுகளையும் ஒரே நேரத்தில் திட்டமிட்டு புக்கிங் செய்து கொள்ளலாம்.

தீபாவளி சிறப்பு ரயில்
Diwali Special Train
இதையும் படியுங்கள்:
பழைய கம்பெனி பிஎஃப் பணத்தை எடுக்கலையா? முடங்கிய பணம் நேரா வங்கி கணக்கிற்கு வரும்: EPFO புது ரூல்ஸ்!
Special train

பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்பவர்களின் முதல் தேர்வு ரயில் போக்குவத்து தான். ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பார்கள். ஆனால் அரசுப் பேருந்துகளிலும் இடம் கிடைக்கவில்லை என்றால் தனியார் பேருந்துகளைத் தான் நாட வேண்டும். ஆனால், பண்டிகை காலத்தில் தனியார் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது பயணிகளுக்கு சிரமத்தைக் கொடுக்கும்.

இந்நிலையில் தீபாவளிக்கு சௌகரியமாக ஊருக்குச் செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது ரயில்வே நிர்வாகம். சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் நாளை தவறாமல் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

சிறப்பு ரயில்கள் புறப்படும் சரியான நேரம் மற்றும் முன்பதிவு தொடங்கும் தேதியை அறிந்து கொண்டு, உரிய நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்வது நல்லது. இதன்மூலம் கடைசி நேரக் கூட்ட நெரிசல் மற்றும் தட்கல் அலைச்சல்களைத் தவிர்க்கலாம். மேலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான ரயில் பயணச்சீட்டை முன்கூட்டியே உறுதி செய்து தீபாவளி பண்டிகையை நிம்மதியாக கொண்டாடலாம்.