

தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ (POCSO) வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மற்றும் நீதிபதிகள், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்துமாறு வழக்கறிஞர்களிடம் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான வீடியோக்கள் வெளியானது குறித்து விசாரிக்கக் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கி.வீரமணி வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை ஊடகங்களோ அல்லது சமூக வலைதளங்களோ வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்காலத் தடை விதித்துள்ளது.
செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துளது.
ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் திமுகவினரை குற்றம்சாட்டி கருத்து கூற தடை கோரி துரைமுருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். அமைச்சர் நிர்மல்குமார், ஆதவ் ஆர்ஜூனா, தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு தடை விதிக்கக்கோரி திமுக மனு தாக்கல் செய்திருந்தது.
வழக்கு தொடர அனுமதிகோரி திமுக தாக்கல் செய்த மனு மீது அமைச்சர்கள், சமூக வலைதள நிறுவனங்கள் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட மெட்டா, யூடியூப், எக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என திமுக தரப்பு மனு அளித்துள்ளது.
முன்கூட்டியே நோட்டீஸ் வழங்காமல் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என திமுக அமைச்சர்கள் தரப்பு வாதம்.
வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன அதிபரான ஆர். வீரமணி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்தது. ஆரம்பத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என இந்த வழக்கை முடிக்க போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மறுவிசாரணை தீவிரமடைந்தது.
வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் செல்போன்கள், ஆவணங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வழக்கை முறையாக விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் ரகசியத்தைக் காக்கவும், பெண் அதிகாரிகள் அடங்கிய 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை (SIT) அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களும் முறையீடுகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.