தமிழகத்துக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி... தயாராக இருங்க... நிபுணர் குழு எச்சரிக்கை..!

எல்-நினோ காரணமாக வறட்சி மட்டுமே ஏற்படும் என்ற கருத்து சரியானதல்ல என்றும், கடந்த கால அனுபவங்கள் இதனை காட்டுவதாகவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
super El Nino Warning
super El Nino WarningAI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

2026-2027 காலக்கட்டத்தில் தீவிரமடையும் எல்-நினோ (El Niño) தாக்கத்தால் தமிழகத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் கடும் வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசின் நிபுணர் குழு எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் எல்நினோவால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு நிபுணர் ஆலோசனை குழுவை அமைத்தது. அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7 நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர். இந்த குழுவின் முதல்கட்ட பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

அதில், 2026 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகைப் பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட 2.20 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வலுவான எல்-நினோ நிலை காணப்படுவதாகவும், இந்த நிலை 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மேலும் வலுவடைந்து 2027ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2026-2027 காலக்கட்டத்தில் தீவிரமடையும் எல்-நினோ தாக்கத்தால் தமிழகத்தில் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் கனமழை மற்றும் வெள்ள அபாயமும், 2027 கோடைக்காலத்தில் கடும் வெப்ப அலை மற்றும் நீர்ப்பற்றாக்குறையும் ஏற்படக்கூடும் என்று தமிழக அரசுக்கு அமைக்கப்பட்ட நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எல்-நினோ காரணமாக வறட்சி மட்டுமே ஏற்படும் என்ற கருத்து சரியானதல்ல என்றும், கடந்த கால அனுபவங்கள் இதனை காட்டுவதாகவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

மழை மற்றும் வெள்ள அபாயம் எல்நினோ எச்சரிக்கை:

2026-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் சில பகுதிகளில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாக ECMWF பருவகால முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. சில பகுதிகளில் இயல்பைவிட 50 முதல் 200 மில்லி மீட்டர் வரை கூடுதல் மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வடகிழக்கு பருவமழையின்போது சில பகுதிகளில் கனமழை பெய்து நகர்ப்புற வெள்ளம், ஆற்றுவெள்ளம், கடலோர வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் சில பகுதிகளில் மழை குறைந்து நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து குறையவும், குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எல்-நினோ காலகட்டத்தில் வறட்சி மட்டுமல்லாமல், தீவிரமான வடகிழக்கு பருவமழையால் சென்னை, கடலூர் போன்ற கடலோர மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்படலாம்.

திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் அதிதீவிர மழை, நிலச்சரிவு மற்றும் சரிவுகள் உண்டாகலாம்.

எல்நினோ எச்சரிக்கை
எல்நினோ எச்சரிக்கைAI Image

தென் தீபகற்ப பகுதியில் இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடும் வெப்பம் மற்றும் வறட்சி தாக்கம் :

2027 கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். அதாவது கோடை காலங்களில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல் பதிவாகக்கூடும். மேலும் நீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி போன்ற சூழல்களையும் எதிர்கொள்ள நேரிடும். அதாவது, நீர்வரத்து குறைந்து, நீர்நிலைகள் வற்றும் அபாயம் உள்ளதால் மாற்று குடிநீர் ஆதாரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2027-ம் ஆண்டு கோடையை கருத்தில் கொண்டு, வறட்சியைத் தாங்கும் பயிர்களைப் பயிரிடவும், விவசாயிகளுக்கு உரிய முன்னெச்சரிக்கை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் முக்கிய பரிந்துரைகள் :

ஆறுகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை பருவமழைக்கு முன் உடனடியாக சீரமைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
50 ஆண்டுகளில் முதல்முறை! சூப்பர் எல்நினோ ஏற்படுத்தப்போகும் பிரம்மாண்ட மாற்றம்
super El Nino Warning

அரசு மற்றும் பொதுக் கட்டிடங்கள், பள்ளிகளில் வெப்பத்தைக் குறைக்க தளிர்மூடி (cool roof) மற்றும் வெப்பத்தைப் பிரதிபலிக்கும் பூச்சுகளைப் பயன்படுத்த வேண்டும்.

2027 கோடையில் வெப்பநிலைக்கு ஏற்ப பள்ளிகளின் நேரத்தை மாற்றவும், வெளிப்புற விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

வெள்ள நிலவரங்களை நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணிக்க ரோபோடிக் தொழில்நுட்பங்கள், ட்ரோன்கள் (Drones) மற்றும் IoT (Internet of Things) சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஜூலை மாதம் தாக்கும் ‘சூப்பர் எல்நினோ’ - தமிழ்நாட்டில் ஏற்படப்போகும் பேராபத்து..!
super El Nino Warning

பொதுமக்களுக்கு தமிழில் எச்சரிக்கை தகவல்களை வழங்கும் முறையை பலப்படுத்தவும், மாற்று குடிநீர் ஆதாரங்களை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com