தேர்தல் 2026: இது எத்தனையாவது தேர்தல் தெரியுமா? - ஒரு சுவாரஸ்யப் பார்வை!

TN Election 2026
2026 Election
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பிரச்சாரத்தில் முன்னணி கட்சிகள் ஈடுபட்டிருக்கும் நிலையில், வேட்பாளர் பட்டியலும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் எத்தனையாவது தேர்தல் என உங்களுக்கு தெரியுமா? இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை தேர்தல்கள் நடந்துள்ளன என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

இதனை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா! உங்கள் ஆர்வத்திற்கு இந்தப் பதிவு பதில் அளிக்கும்.

சுதந்திர இந்தியாவிற்கு பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக 1952 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தற்போது வரை தமிழ்நாட்டில் 16 சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தற்போது நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 17ஆவது தேர்தலாகும்.

1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, 1957-ல் நடைபெற்ற தேர்தலே தற்போதைய தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு உட்பட்ட முதல் தேர்தலாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது நம் மாநிலத்தின் பெயர் சென்னை மாகாணமாக (Madras State) இருந்தது. சொல்லப்போனால் முதல் 4 தேர்தல்கள் சென்னை மாகாணம் என்ற பெயரிலேயே நடைபெற்றது.

தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, 1971-ல் தான் முதல் தேர்தல் நடைபெற்றது. அவ்வகையில் பார்த்தால் தமிழ்நாடு என்ற பெயரில் இதுவரை 12 தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெற இருக்கும் தேர்தல் 13-வது தேர்தல் ஆகும்.

1952-ல் நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் இந்திய அளவில் மிகப் பிரபலமாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன்படி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

இதையும் படியுங்கள்:
மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு:தமிழக அரசியலையே உலுக்கிய அந்த 5 அதிர்ச்சித் தோல்விகள்!
TN Election 2026

ஆண்டு வாரியாக தேர்தல், வெற்றி பெற்ற கட்சி மற்றும் முதல்வர் விவரங்கள்:

1. 1952 - காங்கிரஸ் - ராஜாஜி / காமராசர்

2. 1957 - காங்கிரஸ் - காமராசர்

3. 1962 - காங்கிரஸ் - காமராசர் / பக்தவச்சலம்

4. 1967 - திமுக - அண்ணாதுரை / கருணாநிதி

5. 1971 - திமுக - கருணாநிதி

6. 1977 - அஇஅதிமுக - எம்.ஜி.ஆர்.

7. 1980 - அஇஅதிமுக - எம்.ஜி.ஆர்.

8. 1984 - அஇஅதிமுக - எம்.ஜி.ஆர். /வி.என்.ஜானகி

9. 1989 - திமுக - கருணாநிதி

10. 1991 - அஇஅதிமுக - ஜெயலலிதா

11. 1996 - திமுக - கருணாநிதி

12. 2001 - அஇஅதிமுக - ஜெயலலிதா / ஓ.பன்னீர்செல்வம்

13. 2006 - திமுக - கருணாநிதி

14. 2011 - அஇஅதிமுக - ஜெயலலிதா / ஓ.பன்னீர்செல்வம்

15. 2016 - அஇஅதிமுக - ஜெயலலிதா / ஓ.பன்னீர்செல்வம் / எடப்பாடி பழனிசாமி

16. 2021 - திமுக - மு.க.ஸ்டாலின்.

1967-ம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன

இதையும் படியுங்கள்:
ரசிகர்களுக்கு அதிர்ச்சி.! ஐபிஎல் 2026 தொடக்க நிகழ்ச்சிகள் ரத்து.!
TN Election 2026
logo
Kalki Online
kalkionline.com