UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் அறிமுகம்; ஆனால் ஒரு கண்டிஷன்..!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் (டிசம்பர்) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
யுபிஐ
யுபிஐAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

EPFO 3.0 திட்டத்தின் கீழ், 2026 டிசம்பர் இறுதிக்குள் யுபிஐ (UPI) வழியாக வருங்கால வைப்பு நிதிப் (PF) பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப சோதனைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு, அதற்கான இணையதளத்தில் பல்வேறு விவரங்களை உள்ளீடு செய்து பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.

எனவே இதை எளிமைப்படுத்தும் வகையில் யுபிஐ (UPI) மூலம் பணம் எடுக்கும் வசதியை கொண்டுவர வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது இந்த வசதி அடுத்த மாத (டிசம்பர்) இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. சிறிய தொகைகளுக்கு அடிக்கடி பணம் எடுப்பதைத் தடுக்கவும், நிர்வாகச் செலவுகளைக் குறைக்கவும் குறைந்தபட்சம் ரூ.1,000 பரிவர்த்தனை வரம்பை விதிக்க இபிஎஃப்ஓ திட்டமிட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, நாடு முழுவதும் 'புதிய சென்ட்ரலைஸ்டு ஐடி-எனேபிள்ட் சிஸ்டம் 2.0 (CITES 2.0)' தளத்தில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சரிசெய்து வருகிறது.

இந்த வசதி 2025-26 நிதியாண்டிலேயே அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைத் தேவைகளால் தாமதமானது. தற்போது அடுத்த மாதம் இறுதியில் அமலுக்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

யுபிஐ மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் புதிய வசதிக்கான தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துள்ளன. பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. மேலும், மேலும், குறிப்பிட்ட பயனாளர்களைக் கொண்டு 2 கட்ட சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனையின் போது 102 வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சுமார் ரூ.5 லட்சம் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் (பிஎஃப் பணம்) உடனடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

பிஎஃப் பணம்
PF - UPI apps|பிஎஃப் பணம்

இதில் சிறிய தொகைகளுக்கு அடிக்கடி பணம் எடுப்பதால் ஏற்படும் பரிவர்த்தனை சுமையை குறைப்பதற்காகவும், கணினிச் சுமையைக் குறைக்கவும் குறைந்தபட்சமாக ரூ.1,000 பரிவர்த்தனை வரம்பு நிர்ணயிக்கப் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட PF தொகையை ‘பீம்’ செயலி (BHIM - Bharat Interface for Money) UPI செயலிகள் மூலம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு விரைவாக மாற்ற முடியும். இதனால் அவசரத் தேவைகளுக்குக் காத்திருப்புக் காலம் குறையும். இதற்காக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
EPFO உச்சவரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு: யாருக்கெல்லாம் பயன்? முழு விவரம்!
யுபிஐ

இந்த வசதி நடைமுறைக்கு வந்தால் வருங்கால வைப்பு நிதி (Provident Fund / PF) கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒப்புதலை பெறுவதற்கும், வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கும் ஆகும் காலதாமதம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க EPFO 3.0 கொண்டு வரும் முக்கிய மாற்றங்கள்:

* இணையதளத்தில் நீண்ட விவரங்களை உள்ளிடுவதற்குப் பதிலாக, UPI வழியாக எளிதாக PF பணத்தை எடுக்க முடியும். குறைந்தபட்சம் ரூ. 1,000 வரம்பு பரிசீலனையில் உள்ளது.

* 75% வரம்பு எதிர்பார்க்கப்படுகிறது; சில சூழ்நிலைகளில் 90% வரையிலான அணுகலும் பரிசீலனையில் உள்ளது.

* குறைந்தபட்ச இருப்புத் தொகை விதி 25%-லிருந்து 10% ஆகக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* முன்பு சுமார் 20 நாட்கள் வரை இருந்த க்ளைம் செட்டில்மெண்ட் நேரம் இனி 3 நாட்களுக்கும் குறைவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* கோர் பேங்கிங் வசதியுடன் ஒருங்கிணைந்த தளம் மற்றும் ATM மூலம் உடனடி பணம் எடுக்கும் வசதியும் EPFO 3.0-இன் கீழ் திட்டமிடப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
பழைய கம்பெனி பிஎஃப் பணத்தை எடுக்கலையா? முடங்கிய பணம் நேரா வங்கி கணக்கிற்கு வரும்: EPFO புது ரூல்ஸ்!
யுபிஐ

யுபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டாலும், தற்போதுள்ள பணம் எடுக்கும் விதிமுறைகளும், வரம்புகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.